இந்தியாவின் டாப் 5 பணக்கார You Tuber-கள்.. Rolls Royce-கே சொந்தக்காரரான டெக்ன்கள் குருஜி..

By Deepika

Updated on:

யூட்யூப் இன்று பலரின் வாழ்க்கையை மாற்றி வருகிறது. வீட்டில் இருக்கும் பெண்களில் தொடங்கி, பல துறைகளிலும் இருக்கும் இளைஞர்கள், வயதானவர்கள் ஏன் குழந்தைகள் கூட யூட்யூபில் வீடியோ போட்டு லட்சங்களில் சம்பாதித்து வருகின்றனர். ஆனால் இதில் பல யூட்யுபர்கள் கோடிகளில் சம்பாதித்து வருகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா ?

ஆம், இந்த பதிவில் 7 பணக்கார யூட்யுபர்கள் குறித்து காணலாம்.

   

கவுரவ் சவுத்ரி

Gaurav chaudhary

டெக்கினிக்கல் குருஜி என்ற யூட்யூப் சேனலை நடத்தி வருகிறார் கவுரவ் சவுத்ரி. 25 மில்லியன் சாப்ஸ்க்ரைபர்ஸ் பெற்றிருக்கும் இந்த சேனலில் டெக் சம்பந்தப்பட்ட வீடியோக்களை பதிவிடுவார் கவுரவ் சவுத்ரி. இவரின் சொத்துமதிப்பு 360 கோடி.

புவன் பம்

Bhuvan bam

காமெடி நடிகராக இருப்பவர் புவன் பம், 26 மில்லியன் சாப்ஸ்க்ரைபர்ஸ் இவரை பின்தொடர்கினறனர். இவரின் சொத்துமதிப்பு 122 கோடி.

அஜய் நகர்

Ajey nagar

அஜய் நகர் டெக் சம்மந்தப்பட்ட வீடியோக்களையும், என்ஜினீயரிங் சம்பந்தப்பட்ட வீடியோக்களையும் தன்னுடைய சேனலில் பதிவிட்டு பிரபலமானவர். 41 மில்லியன் சாப்ஸ்க்ரைபர்ஸ் இவரை பின் தொடர்கின்றனர். இவரின் சொத்துமதிப்பு 41 கோடி

கான் சார்

Khan sir

கான் சார் தன்னுடைய யூட்யூப் சேனல் மூலம் பலருக்கு கல்வியை புரியும் வகையில் நடத்தி வருகிறார். இவரின் சொத்துமதிப்பு 41 கோடி

த்ருவ் ராத்தி

Dhruv Rathee

த்ருவ், வட இந்தியாவின் மதன் கவுரி என்று சொன்னால் அது மிகையாகாது. இவரின் சொத்துமதிப்பு 24 கோடி

author avatar
Deepika