Connect with us
Parachute

LIFESTYLE

சாதாரண தேங்காய் எண்ணெய்க்குப்பின் இருக்கும் 70,000 கோடி சாம்ராஜ்யம்.. பாரசூட் தேங்காய் எண்ணெய் உருவான வரலாறு..

சாதாரணமாக இன்று நாம் பெட்டிக்கடைகளில் கூட தேங்காய் எண்ணெய் கொடுங்கள் என்று கேட்டால் முதலில் ஞாபகத்திற்கு வருவது பாராசூட் தேங்காய் எண்ணெய்தான். ஒரு நுகர்வோர் பொருள் அவர்களின் வாழ்வின் அங்கமாகமாகவே மாறிவிட்டது என்றால் அந்தபொருளின் வெற்றியை நாம் அதை வைத்தே தெரிந்து கொள்ளலாம். அப்படி ஏழை முதல் பணக்காரர் வரை அனைவரின் வீட்டிலும் நீங்கா இடம் பிடித்திருக்கும் ஒரு நுகர்வோர் பொருள்தான் பாராசூட் தேங்காய் எண்ணெய்.

இந்த பிராண்டடை உருவாக்கியவர்கள் குஜராத்தின் பிரபல மசாலா கம்பெனியை நடத்தி வந்த வல்லபதாஸ் மரிகோ நிறுவனத்தினர் ஆவர். இவரின் மகனான ஹர்ஷ் 1970களில் தலைமைப் பொறுப்பினை ஏற்ற பிறகு தனது தொழில் திறமையால் மசாலாப் பொருட்களின் சந்தையில் குஜராத் மாநிலத்தையே வளைத்துப் போட்டு வைத்திருந்தார். பின்னர் இவர்கள் எண்ணெய் சந்தையில் நுழைய ஆரம்பித்தனர்.

   

ஆரம்பகால கட்டங்களில் அதாவது 1970-கள் வரை தேங்காய் எண்ணெய்கள் தகர டின்களில் அடைத்து விற்பனை செய்யப்பட்டன. இதனால் எலித்தொல்லை அதிகமாக இருந்தது. மேலும் பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து விற்கப்பட்ட போது இன்னும் எலிகளுக்கு அதிக சுவையைக் கொடுத்தது. இதற்கு ஒரு முடிவு கட்ட ஆரம்பித்து உருளை வடிவ டப்பாக்களில் தேங்காய் எண்ணெயை அடைத்து மரிகோ நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் பாராசூட் தேங்காய் எண்ணெய்.

parachute

#image_title

பாராசூட் என்ற பெயர் வருவதற்கு இதான் காரணம் என்னவென்றால் இரண்டாம் உலகப் போரின் போதுதான் இந்தியர்கள் முதன்முதலில் பாராசூட் உபயோகத்தை அனுபவித்தனர். அப்போது ராணுவ வீரர்கள் பாராசூட்களை பாதுகாப்பாக தரையிறக்கியது ஆச்சரியமாக இருந்தது. மக்கள் பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையுடன் பாராசூட்களை இணைக்கத் தொடங்கினர். அதனால்தான் பாம்பே ஆயில் தேங்காய் எண்ணெய் பிராண்டிற்கு இந்தப் பெயரை வைத்தது.

parachute

#image_title

தோல்வி மேல் தோல்வி.. ஆன்லைன் ஷாப்பிங் உலகின் அரசனாக திகழும் Alibaba. com உருவான வரலாறு..

இதன் சோதனை முயற்சியாக உருளை வடிவில் டப்பாக்களை வடிவமைத்து எலிகள் இருக்கும் இடங்களில் வைக்கப்பட்டது. ஆனால் எலிகளால் அவற்றை கொறிக்க முடியவில்லை. அதன்பின் சந்தையில் இந்த யுக்தியைப் பயன்படுத்தி தேங்காய் எண்ணையை விற்பனை செய்ய மளமளவென வளர்ச்சி அடையத்தொடங்கியது பாராசூட் தேங்காய் எண்ணெய். தரமான, சுத்தமான தேங்காய் எண்ணெய் தயாரிப்பால் பொதுமக்களிடம் வெகுமாக சென்று சேர்ந்தது.

parachute

#image_title

இன்று இந்தியாவின் ஒவ்வொரு இல்லத்திலும் தனது பிராண்டை குடியிருக்கச் செய்து எண்ணெய் வர்த்தகத்தின் அரசனாகத் திகழ்கிறது மாரிகோ நிறுவனம். பாராசூட் இன்னமும் அவர்களை மேலே உயர்த்திக் கொண்டே செல்கிறது.  கிட்டத்தட்ட 25 நாடுகளில் தன்னுடைய பிராண்டை வெற்றிகரமாக விற்பனை செய்து வருகிறது. தன்னுடன் போட்டியிட்ட அனைத்து பிராண்டுகளையும் பின்னுக்குத் தள்ளி இன்றும் மக்களிடத்தில் முன்னணியாக விளங்கி சுமார் 70,000 கோடி வர்த்தகத்தினை திறம்படச் செய்து வருகிறது.

Continue Reading

More in LIFESTYLE

To Top