#image_title
புற்றுநோய் என்பது நம் உடலில் உள்ள செல்கள் கட்டுப்பாடு இல்லாமல் பெரிதாக வளர்ந்து மற்ற செல்களை அழிப்பதே கேன்சர் அல்லது புற்றுநோய் எனப்படுகிறது. புகைப்பிடித்தல், மது அருந்துதல், மோசமான ஊட்டச்சத்து, ஆரோக்கியமற்ற உணவு முறை, நச்சு ரசாயனங்களுடன் வேலை செய்வது போன்றவை புற்று நோய்க்கான காரணங்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் புற்று நோயால் அவதிப்படுகிறார்கள். யாரை கேட்டாலும் புற்றுநோய் என்று கூறும் அளவிற்கு புற்றுநோய் பரவி இருக்கிறது. இந்த புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு நம் உடம்பில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் என்னென்ன என்பதை இனிக் காண்போம்.
ஆராய்ச்சிகளின் படி ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கம் புற்றுநோயிலிருந்து நம்மை தப்புவிக்க வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. எதையெல்லாம் சாப்பிட வேண்டும் என்பது முக்கியமான ஒன்றாகும். பீட்ரூட், முள்ளங்கி, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், பிரக்கோலி போன்ற காய்கறிகளில் பீட்டா கரட்டின் உள்ளது. இது புற்றுநோயை தடுக்க உதவுகிறது.
அன்றாடம் உணவில் பச்சை இலை காய்கறிகள் அதிகளவுக்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ஸ் இருக்கிறது. இந்த பச்சை இலை காய்கறிகளில் புற்றுநோயை தடுப்பதற்காக தேவைப்படும் போலிக் அமிலம் இருக்கிறது.
நான் அன்றாடம் சேர்த்துக் கொள்வது, எளிதாக கிடைக்கக்கூடிய பூண்டு, புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பூண்டில் தையல்ரைசல், பைட் அலிசின், டயல் சல்பைட் போன்ற புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளுடன் கூடிய பல வேதியியல் மூலக்கூறுகள் உள்ளன.
புற்றுநோயை தடுக்கும் முக்கியமான உணவுகளில் தக்காளியும் இடம்பெறுகிறது. தக்காளியின் சிவப்பு நிறத்துக்கு காரணமான லைகோபின் நுரையீரல் மற்றும் வயிற்றுப் புற்று நோயை தடுக்க உதவுகிறது என்று ஆய்வுகள் கூறுகிறது.
ஸ்ட்ராபெரி, ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி போன்ற பெர்ரி வகை பழங்களை சாப்பிடுவது அதிகப்படியான வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள் நம் உடம்பிற்கு கிடைக்கும். இது புற்று நோயை தடுப்பதில் நமக்கு உதவுகிறது.
இது தவிர கேரட், பீன்ஸ், லவங்கப்பட்டை, ஆலிவ் எண்ணெய், மஞ்சள், சிட்ரஸ் பழங்கள், கொழுப்பு நிறைந்த மீன், கிரீன் டீ போன்றவை புற்றுநோய் தடுப்பதில் முக்கியமான பங்கை வகிக்கின்றன. ஆகவே எந்த ஒரு நோய் ஆனாலும் சரி நம் உணவு பழக்கமுறையினால் நோய் வராமல் தடுப்பதற்கான சாத்திய கூறுகள் இருக்கின்றன. அதனால் நம் வாழ்க்கை வளமானதாக இருக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள்.
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல்…
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 39 நாட்களாக…
தமிழகம் முழுவதும் இன்று சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 6…
தமிழகத்தில் இன்று சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பரச்சேரி கிராம…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான அணுஆயுத விவகாரத்தில் நிலவி வந்த போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது புதிய திருப்பத்தை…
இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் சட்டசபை தேர்தல்கள் நிறைவடைந்தவுடன், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.25 முதல் ரூ.28…