சன் டிவியில் தொடர்ந்து புதுப்புது சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நிலையில் விஜய் டிவி மற்றும் சன் டிவி இடையே தொடர்ந்து டிஆர்பி யில் கடும் போட்டி நிலவி வருகின்றது. குறைந்த ரேட்டிங் வரக்கூடிய தொடர்களை விரைவில் முடித்துவிட்டு புது தொடர்களை அறிமுகம் செய்து வருகின்றன. கடந்த சில வாரங்களாக முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டு வந்தது விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியல். தற்போது சன் டிவியின் சிங்க பெண்ணே சீரியல் 9.03 ரேட்டிங் புள்ளிகளை பெற்று மீண்டும் முதல் இடத்திற்கு சென்றுள்ளது.
இதற்கு அடுத்ததாக சன் டிவியின் கயல் சீரியல் 8.58 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. மேலும் மூன்றாவது இடத்தையும் 7.63 புள்ளிகளை பெற்று சன் டிவியின் சின்ன மருமகள் சீரியல் பெற்றுள்ளது. அடுத்ததாக இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் வானத்தைப்போல சீரியல் 7.52 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. அடுத்து 7.21 புள்ளிகள் பெற்று சுந்தரி சீரியல் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் முதலிடத்தில் இருந்து வந்த சிறகடிக்க ஆசை சீரியல் பெரிய சரிவை சந்தித்து தற்போது ஏழாவது இடத்தில் 6.90 புள்ளிகளுடன் உள்ளது. இதற்கு அடுத்ததாக பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகிய சீரியல்கள் இடம் பிடித்துள்ளன. கடந்த சில வாரங்களாக விஜய் டிவி முன்னணி வகித்து வந்த நிலையில் இந்த வாரம் முதல் சில இடங்களை கூட பிடிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
முதன்மை கதையை விட்டுவிட்டு டாப் சீரியல்கள் அனைத்தும் வேறு கதைகளத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. அடுத்த வாரம் ஏதாவது புதிய ட்விஸ்ட் வைத்து விஜய் டிவி முதல் இடத்தை பிடிக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ன் ஒரு பகுதியாக, வளர்ந்து வரும் இளம் நடிகரும் பாடகருமான கென் கருணாஸ் தனது குடும்பத்துடன்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது ஜனநாயகக் கடமையை…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.…
தபால் நிலையத்தின் 'கிசான் விகாஸ் பத்ரா' (KVP) திட்டம், முதலீட்டாளர்களின் பணத்தை பாதுகாப்பாக இரட்டிப்பாக்க உதவும் ஒரு சிறந்த சேமிப்புத்…
புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை (ENT) பிரிவில் காலியாக உள்ள 'திட்ட தொழில்நுட்ப உதவியாளர்' பணியிடத்திற்குத்…