#image_title
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக இருந்தவர் MGR. இவரின் முழு பெயர் மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்பதாகும். ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்து சினிமாவில் நுழைந்து சினிமாவையே தனது புரட்சிகரமான நடிப்பால் ஏராளமான ரசிகர் என்ற பக்தர்களை பெற்றார் MGR. சினிமாவை விட தமிழ்நாட்டை சிறப்பாக தனது ஆட்சியின் மூலம் வழிநடத்தியவர் MGR.
தமிழ்நாட்டின் நாகர்கோவிலில் பிறந்து வளர்ந்தவர் என் எஸ் கிருஷ்ணன். இவரது முழு பெயர் நாகர்கோயில் சுடலைமுத்து கிருஷ்ணன் என்பதாகும். இவரை சினிமா உலகில் என் எஸ் கே என்று அழைப்பர் மற்றும் கலைவாணர் என்றும் அழைப்பர். இவர் 1940 50 களில் தமிழ் சினிமாவில் பணியாற்றிய நடிகர், நகைச்சுவை நடிகர், பின்னணி பாடகர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவரை இந்தியாவின் சார்லி சாப்ளின் என்றும் கூறுவர்.
அவரின் மனைவி டி ஏ மதுரம் அவர்களும் தமிழ் சினிமாவின் நடிகை ஆவார். இவரது பேரன் என் எஸ் கே ராஜன் 2006 ஆம் ஆண்டு நாகரிக கோமாளி திரைப்படத்தில் நடித்துள்ளார். அவரது பேத்திகள் அனு வரதன் மற்றும் ரம்யா என் எஸ் கே ஆகியோர் சினிமா துறையில் பணியாற்றுகின்றனர். ரம்யா என் எஸ் கே விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார் மற்றும் இவர் ஒரு பின்னணி பாடகி என்பது குறிப்பிடத்தக்கது.
வறுமையில் வாடியதால் நாடகங்களில் நடிக்க வந்த எம்ஜிஆருக்கு கலைவாணர் என் எஸ் கே பல உதவிகளை செய்துள்ளார். அப்படி சினிமாவில் நடிப்பதற்கும் என் எஸ் கே உதவி செய்துள்ளார். அப்போதுதான் எம்ஜிஆர் சினிமாவில் அடி எடுத்து வைத்த காலகட்டம் அது.
1947 ஆம் ஆண்டு ராஜகுமாரி திரைப்படத்தில் நடித்ததற்கு பிறகு சினிமா வாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருந்த எம்ஜிஆர்க்கு என் எஸ் கே அவர்களின் நாடக கம்பெனியில் மாத சம்பளத்திற்கு பணியாற்றும் வேலை கிடைத்தது. அங்கே நடிப்பையும் கற்றுக்கொண்டு பணிபுரிந்து கொண்டிருந்தார் எம்ஜிஆர். அப்போது என் எஸ் கே ப்ரொடக்ஷன் கம்பெனியில் கீழ் 1951ம் ஆண்டு பைத்தியக்காரன் படம் வெளியானது. இந்த பைத்தியக்காரன் திரைப்படத்தில் எம்ஜிஆருக்கு நடிக்க வாய்ப்பு அளித்தார் என் எஸ் கே.
1951 ஆம் ஆண்டு வெளியான பைத்தியக்காரன் திரைப்படத்தை கிருஷ்ணன் பஞ்சு இயக்கியிருப்பார். சி ஆர் சுப்பிரமணியன் இசையமைத்த இந்தப்படம் மெகா ஹிட் ஆனது. படத்தின் நாயகியாக என் எஸ் கே அவர்களின் மனைவி மதுரம் நடித்திருப்பார்.
அன்றைய காலகட்டத்தில் பத்திரிகையாளர் லட்சுமி காந்தன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த என் எஸ் கே மேல்முறையீடு வழக்கை லண்டன் நீதிமன்றத்தில் தொடர்ந்து இருந்தார். அப்போது என் எஸ் கே வின் மனைவிக்கு வழக்கை நடத்த போதுமான பணம் இல்லை. ஏனென்றால் என் எஸ் கே தன் வாழ்நாளில் தானம், தர்மம் என செய்து அனைத்து பணத்தையும் வாரி வழங்கியிருந்தார்.
இதை அறிந்த எம்ஜிஆர் என் எஸ் கேக்கு உதவி செய்யும் விதமாக தனக்கு படத்தில் வாய்ப்பு அளித்ததற்காக அந்த நன்றியை காட்டுவதற்காக பைத்தியக்காரன் திரைப்படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்துள்ளார் எம்ஜிஆர். வழக்கில் வெற்றி பெற்ற என் எஸ் கே திரும்பி வந்து அவரும் பைத்தியக்காரன் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த படம் பெரும் ஹிட் ஆகி என்.எஸ்.கேக்கு பெயர் வாங்கி கொடுத்தது. தனக்கு வாய்ப்பளித்ததற்காக அந்த நன்றியை என்றும் மறவாமல் எம்ஜிஆர் நடந்து கொண்டிருக்கிறார்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…