அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்த நீட்டிப்பு மற்றும் அமைதி உடன்பாட்டை எட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படாததால் இரு நாடுகளுக்கும் இடையேயான ராணுவ மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. கடந்த வார இறுதியில் ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் சிரிக் தீவுப் பகுதிகளில் உள்ள ஈரானிய ராணுவ ரேடார்கள் மற்றும் ட்ரோன் கட்டுப்பாட்டு மையங்கள் மீது அமெரிக்க விமானப்படை அதிரடித் தாக்குதல்களை நடத்தியது. தற்காப்பு நடவடிக்கையாகவே இந்தத் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்காவின் மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) விளக்கம் அளித்துள்ளது.
அமெரிக்காவின் இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம் மீது ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) இந்தத் தாக்குதலை நடத்தியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. குவைத் நாட்டில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தை இலக்கு வைத்து ஏவப்பட்ட இந்த ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை தங்களின் வான் பாதுகாப்பு அமைப்புகள் நடுவானிலேயே தடுத்து அழித்துள்ளதாக குவைத் நாட்டு ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தீவிர மோதல்போக்கு காரணமாக மேற்கு ஆசிய பிராந்தியத்தில் மீண்டும் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…
தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…
பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…
தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…
தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…
சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…