பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், மாநிலத்தில் 14 வயது நிறைவடைந்த அனைத்துச் சிறுமிகளுக்கும் மனித பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் அதிகச் செலவில் போடப்படும் “கார்டாசில்-4” என்ற தடுப்பூசியை அரசு மருத்துவமனைகள் மூலம் முற்றிலும் இலவசமாக வழங்க கர்நாடக சுகாதாரத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
இந்தியாவில் பெண்களுக்குப் புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகளுக்குக் கருப்பை வாய் புற்றுநோய் முக்கியக் காரணமாக அமைகிறது. 9 முதல் 14 வயதுக்குள் இந்தத் தடுப்பூசியைச் செலுத்துவதன் மூலம், எதிர்காலத்தில் புற்றுநோய் உருவாகும் அபாயத்தைப் பெருமளவு குறைக்க முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இத்திட்டத்தின் கீழ் இந்த தடுப்பூசி ஆறு மாத இடைவெளியில் இரண்டு தவணைகளாகச் செலுத்தப்பட உள்ளது.
பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்த மத்திய அரசின் “யு-வின்” ன் அல்லது செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், நேரடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சென்றும் இச்சேவையைப் பெற முடியும். பெண் குழந்தைகளின் எதிர்கால சுகாதாரத்தைப் பாதுகாக்கும் முன்னோடி முயற்சியாகவும், புற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளில் ஒரு முக்கியமான மைல்கல்லாகவும் இந்த திட்டம் பார்க்கப்படுகிறது.
அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…
தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…
தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…
தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…
சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…
1952-ஆம் ஆண்டு அமெரிக்காவின் போர்ட்டோ ரிகோவில் உள்ள சான் ஜூவான் நகரிலிருந்து நியூயார்க் நோக்கி 69 பயணிகளுடன் புறப்பட்ட பயணிகள்…