லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பினரின் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தங்களின் படைகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், எல்லைப் பகுதிகளில் மோதல்கள் நீடித்து வந்தன. இந்த நிலையில், தெற்கு லெபனானில் உள்ள மிக முக்கிய மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘பியூஃபோர்ட் கோட்டை’ (Beaufort Castle) பகுதியை இஸ்ரேல் ராணுவம் தனது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, லெபனானுக்குள் தரைவழி ஊடுருவலை மேலும் விரிவுபடுத்தி, ஹெஸ்புல்லாவின் பிடியை முழுமையாக உடைக்கப் போவதாக நெதன்யாகு காணொளி வாயிலாக அதிகாரப்பூர்வமாகத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
ஹெஸ்புல்லா அமைப்பை தடம் தெரியாத அளவுக்கு முற்றிலுமாக அழிப்போம் என இஸ்ரேல் அரசு சூளுரைத்துள்ள நிலையில், இந்த ராணுவ நகர்வு லெபனான் எல்லையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், தெற்கு லெபனானில் ஹெஸ்புல்லாவின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளைத் தங்களின் நிரந்தரப் பாதுகாப்பு மண்டலமாக மாற்றப்போவதாகத் தெரிவித்துள்ளார். இந்த தரைவழித் தாக்குதல்களின் தீவிரம் காரணமாக லெபனானில் இருந்து சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி இடம்பெயர்ந்துள்ளனர். மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் மிக மோசமடைந்துள்ள சூழலில், லெபனான் பிரதமர் நவாஃப் சலாம் இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…
தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…
பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…
தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…
தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…
சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…