செல்போனில் அதிக நேரம் கேம் விளையாடிய சிறுவன்.. கண்டித்த பெற்றோர்.. சில நொடிகளில் காத்திருந்த பேரதிர்ச்சி..!

Spread the love

திருப்பூர் மாவட்டம் அலங்கியம் என்ற பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் சித்தார்த் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். தினமும் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். அதிலும் குறிப்பாக சில கேம்களை செல்போனில் தொடர்ந்து விளையாடி வந்துள்ளார். இதனை பார்த்த பெற்றோர் அதிக நேரம் செல்போன் பயன்படுத்த வேண்டாம் என்று சித்தார்த்தை கண்டித்துள்ளனர். இந்நிலையில் வழக்கம் போல நேற்று பள்ளிக்குச் சென்று விட்டு வீட்டுக்கு வந்த சிறுவன் சித்தார்த் மீண்டும் செல்போனை அதிக நேரம் பயன்படுத்தி கேம் விளையாடிய நிலையில் பெற்றோர் கடுமையாக அவரை கண்டித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சித்தார்த் வீட்டிலிருந்த விஷத்தை குடித்துள்ளார். உடனே வீட்டில் உள்ள அறையில் அவர் மயங்கி விழுந்த நிலையில் அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சித்தார்த்தை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சிறுவன் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். செல்போனை அதிகம் பார்க்க வேண்டாம் என்று பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

அடிக்கடி வயிற்று வலி நாடகம்… டாய்லெட் ஃபிளஷுக்குள் காத்திருந்த பேரதிர்ச்சி… நீட் தேர்வில் மாணவர் செய்த பகீர் மோசடி அம்பலம்..!!

நேற்று நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடைபெற்ற நிலையில், ஹைதராபாத்தில் தேர்வு எழுத வந்த மாணவர் ஒருவர் செய்த அதிர்ச்சிகரமான…

2 minutes ago

“அச்சோ… மனிதனை மிஞ்சிய பாசம்… வீட்டில் புது குழந்தை வந்ததால்.. ஏங்கிய செல்லப் பிராணி… நெட்டிசென்களை கண்கலங்க வைக்கும் வீடியோ…!!”

சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு உணர்ச்சிகரமான வீடியோ, மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் ஆழமான உணர்வுகள் உண்டு என்பதை…

7 minutes ago

“ஐயா என் புள்ளைய உள்ளே விடுங்க” சில நிமிடத் தாமதம்… மகளின் நீட் கனவுக்காக காவலர்களின் காலில் விழுந்து கதறிய தாய்…!!

தெலங்கானா மாநிலம் ஜக்டியாலில் நீட் தேர்விற்குச் சற்று தாமதமாக வந்த தனது மகளைத் தேர்வு எழுத அனுமதிக்கக் கோரி, பெற்ற…

8 minutes ago

அதிர்ச்சி..! பாலில் தண்ணீருக்கு பதில் காய்கறி ஜூஸ்… நீல நிறமாக மாறிய 3 மாதக் குழந்தை… மருத்துவர்கள் விடுத்த அதிரடி எச்சரிக்கை..!!

சீனாவில், தண்ணீருக்குப் பதிலாக காய்கறி ஜூஸ் கலந்து பால் பவுடர் புகட்டப்பட்ட 3 மாதக் குழந்தை, உயிருக்கு ஆபத்தான நிலையில்…

14 minutes ago

“பெண்களுக்கான சட்டங்கள் இதற்கா…? போதைப்பெண் செய்த ‘ஹை-வோல்டேஜ்’ நாடகம்… கொதிக்கும் நெட்டிசன்கள்…!”

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில், மது போதையில் பெண் ஒருவர் நடுரோட்டில் படுத்துக்கொண்டு ரகளை செய்த வீடியோ சமூக…

18 minutes ago

FLASH: லக்னோ பயிற்சி மையத்தில் பயங்கர தீ… 14 பேர் உடல்கருகி பரிதாப பலி…!!

உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ…

20 minutes ago