உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில், மது போதையில் பெண் ஒருவர் நடுரோட்டில் படுத்துக்கொண்டு ரகளை செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிஸ்ராக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில், 32 வயதான ஒரு பெண் பகல் நேரத்தில் மது அருந்திவிட்டு, கையில் சிகரெட்டுடன் சாலையின் நடுவே படுத்துக் கொண்டுள்ளார். இதனால் அந்த வழியே வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அங்கிருந்த பொதுமக்களும் வழிப்போக்கர்களும் அந்தப் பெண்ணிடம் பேசி, அவரை சாலையிலிருந்து எழுந்து மாறுமாறு எவ்வளவோ அறிவுரை கூறினர். ஆனால், எதற்கும் செவிசாய்க்காத அந்தப் பெண் அங்கிருந்து நகர மறுத்து தொடர்ந்து அடம் பிடித்துள்ளார். வாகனங்கள் தொடர்ந்து ஹார்ன் அடித்தும் அவர் எழாமல் நடுரோட்டில் படுத்துக் கிடந்த இந்த ‘ஹை-வோல்டேஜ்’ நாடகம் அங்கிருந்தவர்களால் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். சிலர், “இவர்தான் பாலின சமத்துவத்திற்கு சிறந்த உதாரணம், ஆண்கள் மட்டும் தான் இப்படிச் செய்ய வேண்டுமா?” என்று கிண்டலாகக் கமெண்ட் செய்துள்ளனர். மேலும் சிலர், “ஒரு ஆணாக இருந்தால் இந்நேரம் காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்திருக்கும், பெண்களுக்கான சாதகமான சட்டங்களால் தான் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்கள்” எனத் தங்களது கோபத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு ஜூன் 25 முதல் ஜூன் 28 வரை சிறப்பு பேருந்துகள்…
வாரணாசி ரயில் நிலையத்திற்கு வந்த பீகாரைச் சேர்ந்த மாணவர் ஒருவர், அங்கிருந்த ஒரு உணவுக்கடையில் சோலே பட்டூரே வாங்கியுள்ளார். அதன்…
தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அன்னதான நிகழ்ச்சிகள், ரத்ததான முகாம்கள்,…
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் அலிகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புர்னியா பகுதியில் உள்ள ஒரு பல்லடுக்குக் கட்டிடத்தில் திங்கட்கிழமை…
குஜராத் மாநிலம் ஜூனாகத் பகுதியில், வெளிநாடு செல்ல வேண்டும் என்ற பேராசையினால் பெற்ற தாயையே தாக்கி, லட்சக்கணக்கில் பணம் மற்றும்…
நேற்று நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடைபெற்ற நிலையில், ஹைதராபாத்தில் தேர்வு எழுத வந்த மாணவர் ஒருவர் செய்த அதிர்ச்சிகரமான…