“அச்சோ… மனிதனை மிஞ்சிய பாசம்… வீட்டில் புது குழந்தை வந்ததால்.. ஏங்கிய செல்லப் பிராணி… நெட்டிசென்களை கண்கலங்க வைக்கும் வீடியோ…!!”

Spread the love

சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு உணர்ச்சிகரமான வீடியோ, மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் ஆழமான உணர்வுகள் உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது. அந்த வீடியோவில், நபர் ஒருவர் சோபாவில் அமர்ந்து தனது சிறிய குழந்தையைக் கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில், அருகில் தரையில் அமர்ந்திருக்கும் அவரது வளர்ப்பு நாய், தன் எஜமான் குழந்தையிடம் காட்டும் பாசத்தைக் கண்டு ஏங்குவது போன்ற சோகமான முகபாவனையோடு காணப்படுகிறது. வீட்டில் புதிய குழந்தை வந்ததால் தன் மீதான அன்பு குறைந்துவிட்டதோ என்ற ஏக்கத்தில் அந்த நாய் தவிப்பது பார்ப்பவர் நெஞ்சை உருக்கும் வகையில் உள்ளது.

இந்த வீடியோவின் மிக உருக்கமான பகுதியே அந்த நாயின் கண்களும் அதன் முகபாவனையும்தான். அதன் கண்கள் கண்ணீரால் குளம் போல் தேங்கியிருக்க, இமைகொட்டாமல் தன் எஜமானையே பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால், தன் குழந்தையைக் கொஞ்சுவதில் மூழ்கியிருக்கும் எஜமானோ, தன் ஆசை செல்லப் பிராணி அருகில் அழுதுகொண்டு நிற்பதை கவனிக்கவில்லை. வீடியோவின் இறுதியில் நாயின் முகத்தை கேமரா நெருங்கிக் காட்டும்போது, “என்னை ஒருமுறை பார்க்க மாட்டாயா?” என்று கெஞ்சுவது போன்ற அதன் சோகமான பார்வை பார்ப்பவர்களை உருக வைக்கிறது.

https://www.instagram.com/reel/DV3R5nlk8yz/?utm_source=ig_web_button_share_sheet

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த நெகிழ்ச்சியான வீடியோவை இதுவரை 1.6 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர், மேலும் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் இதனை லைக் செய்துள்ளனர். வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், “அதை ஒருமுறை கட்டிப்பிடிச்சுக்கோங்கப்பா, பார்க்கவே கஷ்டமா இருக்கு”, “இந்த நாயின் சோகத்தை என்னால் பார்க்க முடியவில்லை, எனக்கே அழுகை வந்துவிட்டது” என தங்களின் எமோஷனலான கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார்கள்.

Swetha

Recent Posts

தமிழகமே உஷார்…! வீட்டுக்குள்ளேயே இருக்கும் ஆபத்து… பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு…!

டெங்கு மற்றும் மலேரியாவை உருவாக்கும் கொசுக்கள் முக்கியமாக தேங்கி நிற்கும் தூய்மையான மற்றும் அசுத்தமான தண்ணீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன.…

43 seconds ago

அடுத்த 4 நாட்களுக்கு நோ டென்ஷன்..! வெளியூர் போறீங்களா..? அரசு கொடுத்த அதிரடி குட் நியூஸ்…!!

முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு ஜூன் 25 முதல் ஜூன் 28 வரை சிறப்பு பேருந்துகள்…

24 minutes ago

“20 ரூபாய் சாப்பாடு 120 ரூபாயா…?!” – வாரணாசி ரயில் நிலையத்தில் எகிறிய மாணவர்… ஓடிவந்து ஓனர் பர்ஸை காலி செய்த போலீஸ்…! வீடியோ வைரல்…!!

வாரணாசி ரயில் நிலையத்திற்கு வந்த பீகாரைச் சேர்ந்த மாணவர் ஒருவர், அங்கிருந்த ஒரு உணவுக்கடையில் சோலே பட்டூரே வாங்கியுள்ளார். அதன்…

46 minutes ago

“எனக்கு கேக் எல்லாம் வெட்ட வேண்டாம்” வாயு கசிவு விபத்தினால் பிறந்தநாள் கேக்கை திருப்பி அனுப்பிய முதல்வர் விஜய்..!!

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அன்னதான நிகழ்ச்சிகள், ரத்ததான முகாம்கள்,…

60 minutes ago

பகீர்.. மரணக் குவியலாக மாறிய லக்னோ கட்டிடம்… கொளுந்துவிட்டு எரிந்த தீயில் 14 உயிர்கள் சாம்பல்… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் அலிகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புர்னியா பகுதியில் உள்ள ஒரு பல்லடுக்குக் கட்டிடத்தில் திங்கட்கிழமை…

60 minutes ago

ச்சீ.. பெற்ற தாய் என்றும் பாராமல்… வெளிநாடு செல்ல ரூ.20 லட்சம் கேட்டு… கழுத்தை நெரித்து கொடூரமாக தாக்கிய மகன்… குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்…!

குஜராத் மாநிலம் ஜூனாகத் பகுதியில், வெளிநாடு செல்ல வேண்டும் என்ற பேராசையினால் பெற்ற தாயையே தாக்கி, லட்சக்கணக்கில் பணம் மற்றும்…

1 மணத்தியாலம் ago