“எனக்கு கேக் எல்லாம் வெட்ட வேண்டாம்” வாயு கசிவு விபத்தினால் பிறந்தநாள் கேக்கை திருப்பி அனுப்பிய முதல்வர் விஜய்..!!

Spread the love

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அன்னதான நிகழ்ச்சிகள், ரத்ததான முகாம்கள், கேக் வெட்டி கொண்டாட்டங்கள் மற்றும் வாண வேடிக்கை உள்ளிட்டவை அவரது ரசிகர்களாலும் கட்சி நிர்வாகிகளாலும் விமரிசையாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், முதல்வரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காகத் தலைமைச் செயலகத்திற்குச் சிறப்பு கேக் ஒன்று வரவழைக்கப்பட்டிருந்தது. ஆனால், திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு விபத்தின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு, “தற்போது கேக் வெட்டும் கொண்டாட்டங்கள் எதுவும் வேண்டாம்” எனக் கூறி, முதல்வர் தரப்பிலிருந்து அந்த கேக் திருப்பி அனுப்பப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தை அடுத்த கன்னிகைப் பேர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட இந்த திடீர் அம்மோனியா வாயு கசிவு விபத்தில், மொத்தம் 74 தொழிலாளர்கள் கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 67 பேர் இன்னும் பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கோர விபத்தில் சிக்கி ஏற்கனவே 5 பேர் உயிரிழந்திருந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு பெண் தொழிலாளி உயிரிழந்துள்ளார். இதனால் அம்மோனியா வாயு கசிவு விபத்தில் உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

6 minutes ago

“நல்லா பண்றீங்க… தினமும் உங்கள பத்திதான் பேச்சு…!” – முதலமைச்சர் விஜய்க்கு போன் போட்டு … வாழ்த்திய ரங்கசாமி…!!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் வேளையில், அவருக்குத் திரைத்துறையினரும் அரசியல் தலைவர்களும் வாழ்த்துகளைக் குவித்து…

16 minutes ago

தமிழகமே உஷார்…! வீட்டுக்குள்ளேயே இருக்கும் ஆபத்து… பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு…!

டெங்கு மற்றும் மலேரியாவை உருவாக்கும் கொசுக்கள் முக்கியமாக தேங்கி நிற்கும் தூய்மையான மற்றும் அசுத்தமான தண்ணீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன.…

30 minutes ago

அடுத்த 4 நாட்களுக்கு நோ டென்ஷன்..! வெளியூர் போறீங்களா..? அரசு கொடுத்த அதிரடி குட் நியூஸ்…!!

முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு ஜூன் 25 முதல் ஜூன் 28 வரை சிறப்பு பேருந்துகள்…

53 minutes ago

“20 ரூபாய் சாப்பாடு 120 ரூபாயா…?!” – வாரணாசி ரயில் நிலையத்தில் எகிறிய மாணவர்… ஓடிவந்து ஓனர் பர்ஸை காலி செய்த போலீஸ்…! வீடியோ வைரல்…!!

வாரணாசி ரயில் நிலையத்திற்கு வந்த பீகாரைச் சேர்ந்த மாணவர் ஒருவர், அங்கிருந்த ஒரு உணவுக்கடையில் சோலே பட்டூரே வாங்கியுள்ளார். அதன்…

1 மணத்தியாலம் ago

பகீர்.. மரணக் குவியலாக மாறிய லக்னோ கட்டிடம்… கொளுந்துவிட்டு எரிந்த தீயில் 14 உயிர்கள் சாம்பல்… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் அலிகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புர்னியா பகுதியில் உள்ள ஒரு பல்லடுக்குக் கட்டிடத்தில் திங்கட்கிழமை…

1 மணத்தியாலம் ago