மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் இரு முதியவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும், குற்றம் சாட்டப்பட்ட அக்தர் மணியார் (64) சந்தையில் தேநீர் விற்பவர் என்றும், சலீம் ஷேக் (60) ரிக்ஷா ஓட்டுநர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சலீம் ஷேக் வழக்கமாக இரவில் பெண்களைத் தனது வீட்டிற்கு அழைத்து வருவதை வாடிக்கையாகக் கொண்டிருந்த நிலையில், சம்பவத்தன்று இந்த இரு முதியவர்களும் சேர்ந்து அந்தச் சிறுமியைத் தங்களது வீட்டிற்கு அழைத்துச் சென்று இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட சிறுமி பயத்தில் அலறிய சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் அதிர்ச்சியடைந்து விழித்தெழுந்துள்ளனர். சந்தேகம் அடைந்த பொதுமக்கள் உடனடியாக கோல்சேவாடி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், வீட்டின் கதவைத் திறந்து பார்த்தபோது வீடு முழுவதும் இரத்தம் சிதறிக்கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாகச் செயல்பட்ட காவல்துறையினர், பாதிக்கப்பட்ட சிறுமியைப் பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த அநாகரிகமான குற்றத்தில் ஈடுபட்ட அக்தர் மணியார் மற்றும் சலீம் ஷேக் ஆகிய இருவரையும் சம்பவ இடத்திலேயே கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து கோல்சேவாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், 60 வயதைக் கடந்த முதியவர்களின் இந்த வக்கிர புத்தி அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
லெபனான் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஈரான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மறுபுறம்,…
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் யோகா உடை அணிந்து யோகாசனம் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில்…
தேசிய ஜனநாயகக் கூட்டணியி இருந்து ஜான் பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளது. கடந்த சட்டமன்றத்…
பீகார் மாநிலம், நௌபத்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் நடனமாடுவதற்காக இரண்டு பெண்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.…
மகாராஷ்டிர அரசியலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (UBT) கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், அக்கட்சியின் 9 நாடாளுமன்ற…
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் மற்றும் முந்தைய அரசின் திட்டங்கள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு…