“60 வயதில் வக்கிர புத்தி.. 15 வயது சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்”… அலறல் சத்தம் கேட்டு கதவைத் திறந்த அக்கம் பக்கத்தினர்.. உள்ளே கண்ட ரத்தக் கறை காட்சி…!

By Nanthini on ஆனி 22, 2026

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் இரு முதியவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும், குற்றம் சாட்டப்பட்ட அக்தர் மணியார் (64) சந்தையில் தேநீர் விற்பவர் என்றும், சலீம் ஷேக் (60) ரிக்‌ஷா ஓட்டுநர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சலீம் ஷேக் வழக்கமாக இரவில் பெண்களைத் தனது வீட்டிற்கு அழைத்து வருவதை வாடிக்கையாகக் கொண்டிருந்த நிலையில், சம்பவத்தன்று இந்த இரு முதியவர்களும் சேர்ந்து அந்தச் சிறுமியைத் தங்களது வீட்டிற்கு அழைத்துச் சென்று இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட சிறுமி பயத்தில் அலறிய சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் அதிர்ச்சியடைந்து விழித்தெழுந்துள்ளனர். சந்தேகம் அடைந்த பொதுமக்கள் உடனடியாக கோல்சேவாடி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், வீட்டின் கதவைத் திறந்து பார்த்தபோது வீடு முழுவதும் இரத்தம் சிதறிக்கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

   

உடனடியாகச் செயல்பட்ட காவல்துறையினர், பாதிக்கப்பட்ட சிறுமியைப் பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த அநாகரிகமான குற்றத்தில் ஈடுபட்ட அக்தர் மணியார் மற்றும் சலீம் ஷேக் ஆகிய இருவரையும் சம்பவ இடத்திலேயே கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து கோல்சேவாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், 60 வயதைக் கடந்த முதியவர்களின் இந்த வக்கிர புத்தி அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.