“விஜய் கட்சியில் வெடித்த அடுத்த புயல்”…. அலறும் புஸ்ஸி ஆனந்த்… பதறியடித்து ஓடும் சிட்டிங் அமைச்சர்கள்…. கதறும் அதிமுக மாஜி புள்ளிகள்….!

Spread the love

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவான தமிழக வெற்றிக் கழகத்தில் தற்போது சீனியர் – ஜூனியர் மோதல் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ஆரம்பகாலம் தொட்டே கட்சிக்காக உழைத்த விஜய் மக்கள் இயக்கத்தின் சீனியர்களுக்கு வெறும் 60 சதவீதப் பதவிகளே வழங்கப்பட்ட நிலையில், வெளியில் இருந்து வந்த செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா போன்றவர்களுக்கு உயர்பதவிகள் தாராளமாக வாரி வழங்கப்பட்டது ஏற்கனவே புகைச்சலை ஏற்படுத்தியிருந்தது. இந்த அதிருப்தி தற்போதைய அமைச்சரவை உருவாக்கத்திலும் எதிரொலித்து, தஞ்சாவூர் சரவணன், மதுரை கல்லாணை போன்ற மூத்த எம்.எல்.ஏ.க்களைப் புறக்கணித்து புதியவர்கள் 7 பேருக்கு அமைச்சர் பதவி தந்ததால், கட்சிக்குள் உள்கட்சிப் பூசல் இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது.

இந்த எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல, அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த வி.ஐ.பி.க்கள் தங்களுக்கு உடனடியாக கட்சி மற்றும் வாரியப் பொறுப்புகளை வழங்கக் கோரி தலைமைக்குக் கடும் நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளனர். “எந்தவொரு பொறுப்பும் இல்லாமல் எங்களால் எப்படி அரசியல் செய்ய முடியும்?” என்று கேள்வி எழுப்பும் மாற்றுக்கட்சி புள்ளிகள், தங்களின் இடத்தைப் பிடிக்க அவசரம் காட்டுவது, காலம் காலமாக உழைத்த சீனியர் நிர்வாகிகளைப் பெருமளவில் கொதிப்படையச் செய்துள்ளது. ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என மாவட்டங்களை உடைக்கத் தலைமை திட்டமிடுவதும் இவர்களின் ஆவேசத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இத்தகைய இடியாப்பச் சிக்கலால் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கியப் புள்ளிகளும் என்ன செய்வதென்று தெரியாமல் திணறி வருகின்றனர். நிலைமையைச் சமாளிக்க உளவுத்துறையின் அறிக்கையைக் கையில் எடுத்துள்ள தலைமை, “மாற்றுக்கட்சியினருக்கு உடனடியாகப் பதவிகள் வழங்கினால் சீனியர்கள் பெரும் அதிருப்திக்கு உள்ளாவார்கள் என உளவுத்துறை எச்சரித்துள்ளது; எனவே பொறுப்புகளைத் தள்ளி வையுங்கள் என முதல்வரும் கட்டளையிட்டுள்ளார்” என்று கூறி, சீனியர்களைக் காரணம் காட்டி இந்த அதிருப்தியாளர்களைச் சமாதானப்படுத்த முயன்று வருகிறார்கள்.

ஆனால், தலைமையின் இந்த மழுப்பலான பதில்களால் அதிமுகவிலிருந்து வந்த வி.ஐ.பி.க்கள் மொத்தமாக வெக்ஸ் ஆகிப்போயிருக்கிறார்கள். கட்சிப் பதவிதான் தள்ளிப்போகிறது என்றால், அரசாங்க வாரிய பதவிகளையாவது கொடுங்கள் என்று அவர்கள் வைக்கும் அடுத்தடுத்த கோரிக்கைகளுக்கும் அமைச்சர்களால் எந்தவொரு உறுதியான உத்தரவாதமும் தர முடியவில்லை. இதனால், “முன்கூட்டியே எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் அவசரப்பட்டு தவெகவிற்குள் வந்தது இவ்வளவு பெரிய தப்பாகிப் போச்சே!” என்று அவர்கள் தங்களுக்குள் புலம்பத் தொடங்கியிருப்பது, தவெக தலைமைக்கு அடுத்த பெரும் தலைவலியையும் உள்கட்சிப் புயலையும் கிளப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

உலகப் போராக மாறுகிறதா…? பேச்சுவார்த்தை நடந்தபோதே ட்ரம்ப் போட்ட ஒற்றை ட்வீட்… பதறும் ஈரான்…!!

லெபனான் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஈரான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மறுபுறம்,…

6 minutes ago

யோகா உடையா..? கிளாமர் ஷூட்டா..? விமர்சனத்திற்குள்ளான மகாராஷ்டிர முதல்வர் மனைவி உடை.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் யோகா உடை அணிந்து யோகாசனம் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில்…

12 minutes ago

BREAKING: NDA கூட்டணியிலிருந்து விலகினார் ஜான் பாண்டியன்… அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தேசிய ஜனநாயகக் கூட்டணியி இருந்து ஜான் பாண்டியன் தலைமையிலான தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளது. கடந்த சட்டமன்றத்…

14 minutes ago

பகீர்… துப்பாக்கி முனையில் கடத்தல்… 13 பேர் கொண்ட கும்பல்… பீகாரில் இரு நடனப் பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்…!!

பீகார் மாநிலம், நௌபத்பூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் நடனமாடுவதற்காக இரண்டு பெண்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.…

17 minutes ago

BREAKING: 6 MP-க்கள் கட்சியில் இருந்து விலகல்… அரசியலில் திடீர் பரபரப்பு….!

மகாராஷ்டிர அரசியலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (UBT) கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், அக்கட்சியின் 9 நாடாளுமன்ற…

26 minutes ago

ரூ.245,85,00,000 அவுட்…. திமுக திட்டங்களுக்கு மொத்தமாக ஆப்பு…. CM விஜய் எடுத்த அதிரடி முடிவு… ஆடிப்போன அரசியல் வட்டாரம்…!

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் மற்றும் முந்தைய அரசின் திட்டங்கள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு…

29 minutes ago