அட கொடுமையே… ஒரு போட்டோக்காக நடுரோட்டில்.. ஹெல்மெட்டுகளுடன் வெறித்தனமாக மோதிக்கொண்ட இளைஞர்கள்…! பெங்களூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

பெங்களூரில் உள்ள மிக முக்கிய அரசு கட்டிடமான ‘விதான சௌதா’வின் முன்புறம் உள்ள நடைபாதையில், கடந்த ஜூன் 28 ஞாயிற்றுக்கிழமை மாலை இருதரப்பு நேபாள இளைஞர்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அப்பகுதியில் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் நடமாடும் நேரத்தில் இந்த வன்முறைச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

புகைப்படம் எடுப்பது தொடர்பான ஒரு சாதாரண வாக்குவாதம் தான் இந்த மோதலுக்குக் காரணமாக அமைந்துள்ளது. ஒரு குரூப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது மற்றொரு குரூப் அதற்கு இடையூறாக இருந்ததாகக் கூறி இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் விரைவில் கைகலப்பாக மாறி, ஹெல்மெட் மற்றும் கைகளாலேயே ஒருவரையொருவர் நடுரோட்டில் பயங்கரமாகத் தாக்கிக் கொண்டனர். இதனை அங்கிருந்த நபர் ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோ எடுக்க, அது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், விதான சௌதா காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, சக்தி, ஈஸ்வர், திபேந்திரா உட்பட 4 நேபாள வாலிபர்களைக் கைது செய்துள்ளனர். இவர்கள் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பாதுகாப்புப் காவலர்களாகப் பணிபுரிந்து வருவது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த மோதலில் தொடர்புடைய மற்ற நபர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Swetha

Recent Posts

“அன்னைக்கு ஒரு பேச்சு.. இன்னைக்கு ஒரு பேச்சா?”… என்ன CM சார் இப்படி பண்றீங்களே?… விஜய் அடுத்த அந்த ஒரு முடிவால் அலறும் தமிழகம்…!

தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் தலைமையிலான தவெக அரசு, கன்னியாகுமரி மாவட்ட அணுக்கனிம…

10 minutes ago

அமித் ஷா போட்ட அதிரடி ஸ்கெட்ச்! நள்ளிரவில் வந்த போன் கால்… பதறியடித்து டெல்லி ஓடும் ஆளுநர் அர்லேக்கர்…!

தமிழகத்தின் முழுநேர ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி அண்மையில் மேற்கு வங்க மாநிலத்திற்கு மாற்றப்பட்டதை அடுத்து, கேரள ஆளுநராக இருக்கும் ராஜேந்திர…

19 minutes ago

விஜய்யின் ‘சிங்க’ கர்ஜனை! அலறிய திருமா, வைகோ… தவெக கூட்டணியில் வெடித்த ‘திடீர்’ பூகம்பம்… நள்ளிரவில் நடந்த பரபரப்பு பஞ்சாயத்து…!

தமிழகத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத தவெக கூட்டணி அரசுக்கு காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவளித்து வருகின்றன. இதில்,…

28 minutes ago

2 சீட்டுனு கிண்டல் பண்ணீங்களே… இன்னைக்கு என்ன ஆச்சு… இனி நாங்கதான் சென்டர்… திமுக, அதிமுக-வை அதிரவைத்த திருமாவளவன்…!

மதுரை மாவட்டம் மேலவளவில் படுகொலை செய்யப்பட்ட முருகேசன் உள்ளிட்ட 6 பேரின் நினைவு நாளையொட்டி, அங்குள்ள மணிமண்டபத்தில் விடுதலைச் சிறுத்தைகள்…

30 minutes ago

அம்மாடியோ வருஷத்துக்கு இத்தனை கோடியா?… காற்றில் பறக்கும் தங்கம்… விஞ்ஞானிகளே மிரண்டுட்டாங்க.. இப்படி ஒரு விசித்திர மலையா…?

அண்டார்டிகாவின் ராஸ் தீவில் அமைந்துள்ள மவுண்ட் எரபஸ் என்ற உலகின் தெற்கே உள்ள மிகத் தீவிரமான எரிமலை, தினசரி தங்கம்…

49 minutes ago

அடுத்த விக்கெட் ரெடி… செந்தில் பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணனுக்கு செக்…. ஆளுநர் கையில் இருக்கும் ‘அந்த’ ரகசிய கோப்பு… தவெக அரசின் அடுத்த டார்கெட்…. பெரும் பரபரப்பு….!

திமுக முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக நிலுவையில் உள்ள சொத்துக்குவிப்பு மற்றும் முறைகேடு…

53 minutes ago