அண்டார்டிகாவின் ராஸ் தீவில் அமைந்துள்ள மவுண்ட் எரபஸ் என்ற உலகின் தெற்கே உள்ள மிகத் தீவிரமான எரிமலை, தினசரி தங்கம் கக்கி வருவதாக வெளியாகியுள்ள ஆய்வு முடிவு உலகளவில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நாசா மற்றும் புவி அறிவியல் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இந்த தனித்துவமான எரிமலை தனது உமிழும் வாயுக்களுடன் கலந்து, நாளொன்றுக்கு சுமார் 80 கிராம் (ஏறத்தாழ 10 சவரன்) எடையுள்ள மிக நுண்ணிய தூய தங்கத் துகள்களைக் காற்றில் பரவ விடுகிறது. சர்வதேச சந்தையின் தற்போதைய தங்க விலையின் அடிப்படையில் பார்த்தால், இதன் மதிப்பு ஒரு நாளைக்குச் சுமார் 6 முதல் 10 லட்சம் ரூபாய் வரையாகும்; அதாவது, ஓராண்டிற்குச் சுமார் 25 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள தங்கத்தை இந்த எரிமலை காற்றில் பறக்கவிடுகிறது.
1991-ஆம் ஆண்டிலேயே ‘ஜியோபிசிகல் ரிசர்ச் லெட்டர்ஸ்’ இதழில் இதுகுறித்த முதற்கட்ட ஆய்வு வெளியான நிலையில், தற்போதைய நவீன எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப் ஆய்வுகள் மேலும் பல சுவாரசியமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன. எரிமலையிலிருந்து வெளியாகும் இந்தத் தங்கத் துகள்கள் சாதாரண தூசி வடிவில் இல்லாமல், மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட 60 மைக்ரோமீட்டர் அளவுள்ள குட்டி குட்டி தங்கப் படிகங்களாக உள்ளன. எரிமலையின் நிரந்தர லாவா ஏரியிலிருந்து வெளியேறும் இந்த நுண் துகள்கள், அண்டார்டிகாவின் கடுமையான காற்றில் கலந்து, எரிமலையிலிருந்து சுமார் 1,000 கிலோமீட்டர் தூரம் வரை பயணித்து, அங்குள்ள பனிப்பாறைகளின் மீது மெல்லப் படிந்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.
பொதுவாக, எரிமலை வாயுக்களில் தங்கம் கலந்திருப்பது உலகிற்கு முற்றிலும் புதிய விஷயமல்ல; இதற்கு முன்பு ஹவாயின் ‘கிலாவியா’ மற்றும் இத்தாலியின் ‘மவுண்ட் எட்னா’ போன்ற எரிமலைகளிலும் சிறிய அளவில் தங்கம் கண்டறியப்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் மிக ஆழமான பகுதியில் இருக்கும் தங்கம், குளோரின் அல்லது சல்பர் போன்ற சேர்மங்களுடன் இணைந்து, கடுமையான வெப்ப வாயுக்களாக மேலே தள்ளப்படுகிறது. இந்த வாயுக்கள் வளிமண்டலக் காற்றில் பட்டு சட்டென்று குளிர்ச்சியடையும் போது, வேதியியல் மாற்றங்கள் நிகழ்ந்து தங்கம் தனியாகப் பிரிந்து படிகங்களாக மாறுகிறது. எனினும், மவுண்ட் எரபஸ் எரிமலை அளவுக்குத் தொடர்ச்சியாகவும், இவ்வளவு அதிக தூரத்திற்கும் தங்கத்தைப் பரப்பும் விசித்திரமான எரிமலை உலகில் வேறெங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒடிசா மாநில அரசுப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடப்புத்தகத்தில், 'ஹம் தில் தே சுகே சனம்' என்ற புகழ்பெற்ற…
டெல்லியில் மருந்துக்கடைக்காரர் ஒருவரின் நேர்மையைப் பாராட்டி, போலந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ தற்போது சமூக…
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள தும்பேரி கிராமத்தில், 16 வயது பள்ளி மாணவி மோவிதாவின் மர்ம மரணமும், அவரது…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சியாக இருந்த திமுகவிற்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மீண்டும் ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கையில் இருந்த…
கடந்த சில தசாப்தங்களாக இந்தியாவின் கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பாக விளங்கி வந்த 'மகாத்மா காந்தி தேசிய…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்களால் அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் மற்றும்…