திமுகவில் அதிரடி மாற்றம்… தோல்விக்குப் பின் ஸ்டாலின் எடுத்த ‘நூற்றாண்டு’ முடிவு… ஸ்டாலின் கையில் கிடைத்த ரகசிய அறிக்கை… அதிர்ச்சியில் சீனியர்கள்…!

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சியாக இருந்த திமுகவிற்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மீண்டும் ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கையில் இருந்த திமுகவிற்கு, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) முட்டுக்கட்டை போட்டு ஆட்சியைப் பிடித்து அசத்தியுள்ளது. இந்தத் தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினே தோல்வியைத் தழுவியது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தத் தோல்விக்கான காரணங்களைக் கண்டறிய தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்க ஸ்டாலினால் 19 குழுக்கள் அமைக்கப்பட்டன. அக்குழுக்கள் சமர்பித்த அறிக்கையில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

தொண்டர்களின் கருத்துகளையும், குழுக்கள் அளித்த அந்தப் புலனாய்வு அறிக்கையையும் தாம் இரவு பகலாகத் தீவிரமாகப் படித்துக் குறிப்பெடுத்து வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். மேலும், தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் உண்மையான பற்றுக்குத் தான் தலைவணங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தோல்வியால் துவண்டுவிடாமல், திமுகவின் அடுத்த நூறாண்டுக்கான பயணத்தைத் திட்டமிடுவதற்காக “கழக மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு” என்ற புதிய குழுவை அமைத்து அவர் தற்போது உத்தரவிட்டுள்ளார்.

இந்த மறுசீரமைப்புக் குழுவில் தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், அர.சக்கரபாணி, எஸ்.எஸ்.சிவசங்கர், தமிழரசி இரவிக்குமார், எம்.எம்.அப்துல்லா, இ.பரந்தாமன், ச.முரசொலி, டாக்டர் எழிலன், எஸ்.கே.பி.கருணா ஆகிய 10 முக்கிய நிர்வாகிகள் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினர் திமுக மாவட்டங்களை மறுவரையறை செய்தல், சார்பு அணிகளைச் சீரமைத்தல், நிரந்தரத் தேர்தல் பணிக்குழுவை உருவாக்குதல் மற்றும் தலைமைக்கு வழிகாட்டக்கூடிய ‘Think tank’ எனப்படும் சிந்தனைக் குழுவின் தேவை குறித்துப் பரிந்துரைகளை ஆராய்வர். இக்குழுவினர் தங்களது இறுதிப் பரிந்துரை அறிக்கையை வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் திமுக தலைவரிடம் சமர்ப்பிக்க உள்ளனர், இதன் மூலம் திமுகவில் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Visaka

Recent Posts

காதலிக்கு ஐபோன் கிப்ட் கொடுக்க காதலன் செய்த விபரீதம்… சிசிடிவியில் போலீஸ் பார்த்த அந்த ஒரு விஷயம்… சென்னையில் நடுராத்திரியில் அரங்கேறிய பரபரப்பு…!

சென்னையில் காதலியின் பிறந்தநாளுக்கு விலை உயர்ந்த ஐபோன் வாங்கிப் பரிசளிப்பதற்காக, சினிமா பாணியில் முகம் மற்றும் பைக்கின் நம்பர் பிளேட்டை…

9 minutes ago

இபிஎஸ்க்கு விழுந்த மரண அடி…. தவெகவில் இணைகிறார்.. சற்றுமுன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…. CM விஜய்க்கு இன்ப அதிர்ச்சி…!

அதிமுகவிலிருந்து விலகிய முக்கிய தலைவர்களான சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் நாளை தமிழக வெற்றிக் கழகத்தில்…

13 minutes ago

மும்பை இந்தியன்ஸில் இருந்து ரோகித் சர்மா அவுட்… பின்னணியில் இருக்கும் அந்த இளம் வீரர்… ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்…!

ஐபிஎல் கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போது டிரேடிங் குறித்த செய்திகள் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன. குறிப்பாக, கடந்த இரண்டு சீசன்களாக மும்பை…

17 minutes ago

“அதிமுகவுக்கு அடுத்த மரண அடி… பதவி ராஜினாமா”… அடுத்த 24 மணி நேரத்தில் விஜய்யை சந்திக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்… அதிரப்போகும் தமிழக அரசியல்….!

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், கரூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர். விஜயபாஸ்கர், அக்கட்சியிலிருந்து விலகி முதல்வர் விஜய்யின் தமிழக…

32 minutes ago

திருச்சி கிழக்கில் லாரன்ஸ் போட்ட திடீர் யூ-டர்ன்… பின்னணியில் இருக்கும் த்ரிஷா?… உடைந்தது பகிர் உண்மை… அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் தற்போது ஹாட் டாப்பிக்காக இருப்பது திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தான். முதல்வர் விஜய் வெற்றி பெற்று,…

33 minutes ago