திருச்சி கிழக்கில் லாரன்ஸ் போட்ட திடீர் யூ-டர்ன்… பின்னணியில் இருக்கும் த்ரிஷா?… உடைந்தது பகிர் உண்மை… அரசியலில் அடுத்த பரபரப்பு…!

Spread the love

தமிழக அரசியலில் தற்போது ஹாட் டாப்பிக்காக இருப்பது திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தான். முதல்வர் விஜய் வெற்றி பெற்று, பின்னர் ராஜினாமா செய்த இந்தத் தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது. குறிப்பாக, இந்தத் தொகுதியில் நடிகை த்ரிஷா போட்டியிட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படும் நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் தான் இங்கு போட்டியிடப் போவதில்லை என்று அதிரடியாக அறிவித்துள்ளார். இதனால், த்ரிஷாவிற்காகத்தான் லாரன்ஸ் இந்தத் தொகுதியை விட்டுக் கொடுக்கிறாரா என்ற கேள்வியும், விவாதமும் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

இந்நிலையில், இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ராகவா லாரன்ஸ் இன்று ஒரு வீடியோவை வெளியிட்டு, தான் ஏன் திருச்சி கிழக்கில் போட்டியிடவில்லை என்பதற்கான தார்மீக காரணத்தை விளக்கியுள்ளார். அவர் பேசுகையில், “நான் திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என்று பலரும் ஆசையோடு அழைக்கிறார்கள், அவர்களுக்கு என் நன்றி. ஆனால் அரசியல் என்று வரும்போது ‘தர்மம்’ என்று ஒன்று இருக்கிறது. விஜய் சார் எப்போது ஹீரோவானாரோ, அப்போதிருந்தே அவருக்காக போஸ்டர் ஒட்டி, கட்சி தொடங்கியதில் இருந்து உழைத்த எத்தனையோ தொண்டர்கள் இருக்கிறார்கள். விஜய் சார் வீட்டில் இந்த வாய்ப்புக்காகக் காத்திருக்கும் அந்த உண்மையான தொண்டர்கள் நிற்பது தர்மமா அல்லது நான் நிற்பது தர்மமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஒருவர் மரத்தை நட்டு வளர்த்து, அதில் வரும் பழத்தை நான் வந்து சாப்பிடுவது சரியாக இருக்காது. மரத்தை வளர்த்த தொண்டர்களே அதைச் சாப்பிடுவதுதான் முறை. ஒரு கட்சியில் தொண்டனாக இருந்து பணியாற்றி, பிறகு கட்சியின் தலைமை பார்த்துப் பதவி கொடுப்பதுதான் சரியான அரசியல். நான் மக்களுக்கு நல்லது செய்வதற்காக மட்டுமே அரசியலுக்கு வர நினைக்கிறேன்; அவசரப்பட்டு எதையும் செய்யப் போவதில்லை” என்று தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், அண்மையில் செய்தியாளர் சந்திப்பில் தான் ‘தெருநாய்கள்’ குறித்துப் பேசிய வார்த்தை சர்ச்சையானதற்கும், தான் அரசியலுக்கு வருவது குறித்து மக்களிடம் கருத்து கேட்டதற்கும் இந்த வீடியோவில் அவர் விரிவான விளக்கமளித்துள்ளார்.

விஜய் ராஜினாமா செய்த தொகுதி என்பதால் திருச்சி கிழக்கு தொகுதிக்கு அனைத்துக் கட்சிகளுமே மிக அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இங்கு பலமான வேட்பாளரை நிறுத்த ஆலோசித்து வரும் வேளையில், த்ரிஷா போட்டியிடுவதாக உலா வரும் செய்திகளுக்கு மத்தியில் லாரன்ஸ் விலகியிருப்பது கவனம் பெற்றுள்ளது. எனினும், லாரன்ஸ் தனது விளக்கத்தில் த்ரிஷா பற்றியோ அல்லது வேறு நபர்கள் பற்றியோ குறிப்பிடாமல், கட்சியின் அடிமட்டத் தொண்டர்களுக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கில் தான் விலகியதாகக் கூறியதன் மூலம், வதந்திகளுக்கு மிக நாகரீகமான முறையில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Visaka

Recent Posts

BREAKING: அடுத்த விக்கெட் அவுட்…. அதிமுகவில் இருந்து Ex அமைச்சர் விலகினார்… EPS-க்கு விழுந்த அந்த ஒரு ‘பலத்த’ அடி….!

அதிமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அறிவித்துள்ள செய்தி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து கட்சிகளும்…

3 minutes ago

இளையராஜாவுக்கு விழுந்த பலத்த அடி… அன்னக்கிளி முதல் 134 படங்களின் பாடல்களுக்கு இனி அவர் சொந்தக்காரர் இல்லையா… நீதிமன்றம் போட்ட தடை…!

திரையிசை உலகில் பல தசாப்தங்களாகத் தன் இசையால் ராஜ்யம் நடத்தி வரும் இசைஞானி இளையராஜாவுக்கு, காப்புரிமை வழக்கில் பெரும் பின்னடைவு…

6 minutes ago

“நயினார் நாகேந்திரனுக்கு டெல்லியில் காத்திருக்கும் பெரிய ‘பதவி’?… தமிழக பாஜகவின் அடுத்த அதிரடி ட்விஸ்ட்… புதிய பாஜக தலைவர் இவர்தானா..?

சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பிறகு தமிழக பாஜகவில் மாநில தலைமை மாற்றம் குறித்த விவாதங்கள் டெல்லி வரை பலமாக எதிரொலிக்கத்…

10 minutes ago

“அமைச்சரவையில் இருந்து தூக்கப்படும் அந்த 2 பேர் யார்?”…. முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு… இடைத்தேர்தலுக்குப் பின் காத்திருக்கும் மிகப்பெரிய ட்விஸ்ட்…!

தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு அமைந்துள்ள சூழலில், நிர்வாகத் திறனை மேம்படுத்தவும் கட்சியின் நற்பெயரைக் காக்கவும்…

20 minutes ago

நிஜ உலக 3 இடியட்ஸ்… மருத்துவமனைக்குள் பைக்கில் மாஸ் என்ட்ரி கொடுத்த டாக்டர் வைரல் வீடியோ… நெட்டிசன்களை வாயடைக்க வைத்த அந்த ஒரு நிமிடம்…!

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள பிரபல ஃபோர்டிஸ் மருத்துவமனை தனது 25-வது ஆண்டு வெள்ளி விழாவைக் கொண்டாடிய போது எடுத்த…

21 minutes ago

காதலிக்கு ஐபோன் கிப்ட் கொடுக்க காதலன் செய்த விபரீதம்… சிசிடிவியில் போலீஸ் பார்த்த அந்த ஒரு விஷயம்… சென்னையில் நடுராத்திரியில் அரங்கேறிய பரபரப்பு…!

சென்னையில் காதலியின் பிறந்தநாளுக்கு விலை உயர்ந்த ஐபோன் வாங்கிப் பரிசளிப்பதற்காக, சினிமா பாணியில் முகம் மற்றும் பைக்கின் நம்பர் பிளேட்டை…

35 minutes ago