நிஜ உலக 3 இடியட்ஸ்… மருத்துவமனைக்குள் பைக்கில் மாஸ் என்ட்ரி கொடுத்த டாக்டர் வைரல் வீடியோ… நெட்டிசன்களை வாயடைக்க வைத்த அந்த ஒரு நிமிடம்…!

Spread the love

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள பிரபல ஃபோர்டிஸ் மருத்துவமனை தனது 25-வது ஆண்டு வெள்ளி விழாவைக் கொண்டாடிய போது எடுத்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக, அங்கு பணிபுரியும் ஒரு ரோபோடிக் மகப்பேறு மருத்துவர், மருத்துவமனையின் நடைபாதையிலேயே ஓட்டி வரப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து மாஸாக என்ட்ரி கொடுத்துள்ளார். அவர் மேடையை நோக்கி வந்தபோது அங்கிருந்த ஊழியர்களும் விருந்தினர்களும் உற்சாகமாகக் கூச்சலிட்டு அவரை வரவேற்றனர். இந்த அசாதாரணமான கொண்டாட்ட வீடியோ மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ பக்கத்திலிருந்து நீக்கப்பட்ட போதிலும், எக்ஸ் தளம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களால் தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது.

இந்தக் காட்சிகள், பாலிவுட்டின் மிகச்சிறந்த திரைப்படமான ‘3 இடியட்ஸ்’ படத்தில் நடிகர் அமீர்கான், காயம் அடைந்த தனது நண்பரின் தந்தையை காப்பாற்றுவதற்காக ஸ்கூட்டரிலேயே மருத்துவமனை வார்டுக்குள் நுழைவாரே, அந்த புகழ்பெற்ற காட்சியைப் பார்ப்பது போல் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அந்தத் திரைப்படக் காட்சியும் இதே மொஹாலி ஃபோர்டிஸ் மருத்துவமனையில்தான் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பழைய திரைப்பட நினைவுகளை ஒப்பிட்டுப் பார்த்து பல நெட்டிசன்கள் தங்களது ஏக்கத்தையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து வருகின்றனர்.

இருப்பினும், இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் ஒரு பெரிய விவாதத்தையும் கிளப்பியுள்ளது. மருத்துவமனை என்பது நோயாளிகள் சிகிச்சை பெறும் மற்றும் ஓய்வெடுக்கும் அமைதியான இடமாக இருக்க வேண்டும் என்றும், அங்கு பைக் ஓட்டுவது நோயாளிகளுக்கு அசெளகரியத்தையும் பாதுகாப்பு குறைபாட்டையும் ஏற்படுத்தும் என்றும் ஒரு தரப்பினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால், மற்றொரு தரப்பினரோ, இது மருத்துவமனை நிர்வாகத்தால் திட்டமிட்டு, ஊழியர்களின் மகிழ்ச்சிக்காக மட்டுமே நடத்தப்பட்ட ஒரு கட்டுப்படுத்தப்பட்ட நிகழ்ச்சி என்றும், இதனை சாதாரணமாகக் கடந்து செல்லலாம் என்றும் மருத்துவரின் இந்த விசித்திரமான என்ட்ரிக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர்.

SATHISH R

Recent Posts

“எழுத்துத் தேர்வு கிடையாது, ஆன்லைன் எக்ஸாம் மட்டுமே”… Degree முடித்தவர்களுக்கு வங்கியில் 6,715 காலிப்பணியிடங்கள்… உடனே அப்ளை பண்ணுங்க…!

வங்கிகளில் அசிஸ்டெண்ட் மேனேஜர் ஆக வேண்டும் என்ற கனவோடு இருப்பவர்களுக்கு வங்கி பணியாளர் தேவாணையம் (IBPS) ஒரு பொன்னான வாய்ப்பை…

33 seconds ago

“அந்த சிஸ்டத்தையே மாத்துங்க”…. விஜய்யின் மெகா கூட்டணிக்கு ‘நோ’ சொன்ன கம்யூனிஸ்ட்கள்…. அடுத்த சில மணி நேரங்களில் நடந்த அதிர்ச்சி திருப்பம்..!

தமிழக அரசியல் களம் தற்போது அடுத்தடுத்த திருப்பங்களை சந்தித்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தோழமை கட்சிகளின் கூட்டத்தில் இடதுசாரி…

10 minutes ago

கணவனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய மனைவி… தூங்கிக் கொண்டிருந்த கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!

பங்களாதேஷில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தொடர் குடும்பத் தகராறு, இறுதியில் கணவனின் உறுப்பை மனைவி துண்டித்த கொடூர சம்பவத்தில்…

14 minutes ago

60 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறை… தமிழக அமைச்சரவையில் மாற்றம்?…. அந்த 7 பேருக்கு கல்தா…. விஜய் கையில் இருக்கும் அந்த ரகசிய லிஸ்ட்…!

தமிழக அரசியல் வரலாற்றில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு புதிய திருப்பமாக, தமிழகத்தில் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக…

17 minutes ago

“5 முன்னாள் அமைச்சர்கள்!.. 15 எம்.எல்.ஏக்கள்”…. 200 பேருந்துகள், 7 மணி நேரப் பயணம்… அதிமுக காலி?… ஒரே நாளில் தவெக-வில் இணையும் 100 முக்கிய தலைவர்கள்… செம குஷியில் விஜய்…!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ளது தவெக. வெறும் ஆட்சிக்கட்டிலில் ஏறுவதோடு…

26 minutes ago

நீங்கதானே என்னை ஃபெயில் ஆக்குனீங்க?… ஆசிரியரின் வயிற்றில் கத்தியை இறக்கிய மாணவன்… பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், மாற்றுச் சான்றிதழ் வாங்குவது தொடர்பான தகராறில் 17 வயது…

31 minutes ago