“நயினார் நாகேந்திரனுக்கு டெல்லியில் காத்திருக்கும் பெரிய ‘பதவி’?… தமிழக பாஜகவின் அடுத்த அதிரடி ட்விஸ்ட்… புதிய பாஜக தலைவர் இவர்தானா..?

Spread the love

சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பிறகு தமிழக பாஜகவில் மாநில தலைமை மாற்றம் குறித்த விவாதங்கள் டெல்லி வரை பலமாக எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. தற்போதைய மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அந்தப் பொறுப்பிலிருந்து மாற்றப்படலாம் என்ற தகவல் மீண்டும் விஸ்வரூபமெடுத்து வரும் நிலையில், அவருக்கு டெல்லியில் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. அதேநேரம், அடுத்த புதிய தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பும், அதற்கான ரேஸில் ராம சீனிவாசன், அர்ஜுன மூர்த்தி, ஏ.பி.முருகானந்தம், வினோஜ் செல்வம் என ஒரு பெரிய பட்டாளமே குதித்திருப்பதும் கட்சிக்குள் போட்டியை தீவிரப்படுத்தியுள்ளது.

இத்தகைய சூழலில், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் “இது நம்ம இயக்கம்” என்ற புதிய என்ட்ரி ஒட்டுமொத்த அரசியல் திட்டத்தையும் தலைகீழாக மாற்றியமைத்துள்ளது. அவர் கட்சியை விட்டு வெளியேறி தனிப் பாதை காட்டியதால், பாஜகவில் உள்ள அதிருப்தி கோஷ்டியினர் அவர் பக்கம் நகர்ந்துவிடுவார்களோ என்ற பயம் தேசிய தலைமைக்கு வந்துள்ளது. உடனே நயினாரை மாற்றினால் அது அண்ணாமலைக்கு சாதகமாகிவிடும் என நினைத்து கடந்த மாதம் இந்த மாற்றம் ஒத்திவைக்கப்பட்டது. இந்த இடைவெளியில் தன் பதவியைக் காக்க நயினார் புதிய முகங்களை கொண்டு வர ஆலோசித்தாலும், அடிமட்ட நிலவரம் டெல்லிக்கு இன்னும் நெருக்கடியையே கொடுத்துக் கொண்டிருக்கிறது.

தற்போது பொறுப்பில் இருந்த நிர்வாகிகள் பலரும் அண்ணாமலையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதால், காலியாகும் இடங்களையும் மாநிலப் பதவிகளையும் பிடிக்க உட்கட்சிக்குள் கடுமையான மல்லுக்கட்டே நடக்கிறது. இதில் உச்சக்கட்ட திருப்பமாக, “கேட்கும் பதவி கிடைக்காவிட்டால் நாங்களும் அண்ணாமலை பக்கமே போய்விடுகிறோம்” என பல நிர்வாகிகள் ஓப்பனாகவே பிளாக்மெயில் செய்யும் தொனியில் காய் நகர்த்தி வருகின்றனர். இதனால், தேர்தல் வேலைகளைச் சரியாகப் பார்க்காதவர்களைத் தூக்க வேண்டும், அதே சமயம் அண்ணாமலை பின்னால் ஆட்கள் போவதையும் தடுக்க வேண்டும் என சீனியர்கள் அடுத்தடுத்து ரகசியக் கூட்டங்களை கூட்டி கையை பிசைந்து வருகின்றனர்.

இந்த உட்கட்சி சலசலப்புகளுக்கு மத்தியில், கூட்டணியில் உள்ள தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் திருமாறன் வெடித்திருப்பது நயினார் நாகேந்திரனுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை நயினார் தன் பக்கம் இழுத்துக் கொண்டதால் டென்ஷனான திருமாறன், தமிழக பாஜக தலைமை ஒரு சிண்டிகேட் போல செயல்படுவதாகவும், நயினாரை உடனடியாக மாற்றாவிட்டால் கூட்டணியில் நீடிப்பது குறித்து டெல்லிதான் யோசிக்க வேண்டும் என்றும் ஓப்பனாக அறிக்கை விட்டுள்ளார். உட்கட்சி மோதல், அண்ணாமலையின் மறைமுக அழுத்தம், கூட்டணிக் கட்சியின் மிரட்டல் என நயினாரைச் சுற்றியுள்ள வளையம் இறுகி வரும் நிலையில், டெல்லியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Nanthini

Recent Posts

“சாப்பாட்டில் விஷம் வச்சும் சாகலனு… தூங்கும்போது காதில் விஷம் ஊற்றிய மனைவி”… அதிகாலையில் அலறி அடித்துக்கொண்டு ஓடிய கணவன்…. அடுத்து வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள புழுதிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (50). கூலித் தொழிலாளியான இவருக்கு உமாராணி என்ற…

3 minutes ago

நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்… 8 வயது சிறுமி வசந்தாவிற்கு பாஸ்டர் வீட்டில் நடந்த கொடுமை… அடுத்த நொடியே பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

ஆந்திரப் பிரதேசத்தின் அல்லூரி மாவட்டம், தாரகொண்டா கிராமத்தில் அரங்கேறியுள்ள இந்த கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கியுள்ளது. அப்பகுதியில் உள்ள…

10 minutes ago

“எழுத்துத் தேர்வு கிடையாது, ஆன்லைன் எக்ஸாம் மட்டுமே”… Degree முடித்தவர்களுக்கு வங்கியில் 6,715 காலிப்பணியிடங்கள்… உடனே அப்ளை பண்ணுங்க…!

வங்கிகளில் அசிஸ்டெண்ட் மேனேஜர் ஆக வேண்டும் என்ற கனவோடு இருப்பவர்களுக்கு வங்கி பணியாளர் தேவாணையம் (IBPS) ஒரு பொன்னான வாய்ப்பை…

12 minutes ago

“அந்த சிஸ்டத்தையே மாத்துங்க”…. விஜய்யின் மெகா கூட்டணிக்கு ‘நோ’ சொன்ன கம்யூனிஸ்ட்கள்…. அடுத்த சில மணி நேரங்களில் நடந்த அதிர்ச்சி திருப்பம்..!

தமிழக அரசியல் களம் தற்போது அடுத்தடுத்த திருப்பங்களை சந்தித்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தோழமை கட்சிகளின் கூட்டத்தில் இடதுசாரி…

21 minutes ago

கணவனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய மனைவி… தூங்கிக் கொண்டிருந்த கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!

பங்களாதேஷில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தொடர் குடும்பத் தகராறு, இறுதியில் கணவனின் உறுப்பை மனைவி துண்டித்த கொடூர சம்பவத்தில்…

25 minutes ago

60 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறை… தமிழக அமைச்சரவையில் மாற்றம்?…. அந்த 7 பேருக்கு கல்தா…. விஜய் கையில் இருக்கும் அந்த ரகசிய லிஸ்ட்…!

தமிழக அரசியல் வரலாற்றில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு புதிய திருப்பமாக, தமிழகத்தில் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக…

28 minutes ago