“பெரம்பூரில் பயங்கரம்”…. கள்ளத்தொடர்பை கைவிடாத வாலிபர்… ஆத்திரத்தில் தந்தை செய்த கொடூர காரியம்….!

Spread the love

சென்னை பெரம்பூர் சக்கரபாணி தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (34). திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த இவர், அதே பகுதியில் கணவனை பிரிந்து வசித்து வரும் பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் ஈடுப்பட்டு வந்துள்ளார். இவர்களின் இந்த தகாத உறவை அப்பெண்ணின் தந்தை பாபு (53) பலமுறை கண்டித்தும், ரமேஷ் அதைக் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வந்துள்ளார். மேலும், ரமேஷ் ஏற்கனவே ஒரு போக்சோ வழக்கில் கைதாகி சிறை சென்று திரும்பியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து எச்சரித்தும் ரமேஷ் தன் போக்கை மாற்றிக்கொள்ளாததால் ஆத்திரமடைந்த பாபு, நேற்று முன்தினம் சக்கரபாணி தெருவில் உள்ள ரமேஷின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், பாபு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரமேஷை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த செம்பியம் போலீசார் உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்து வந்து, ரமேஷின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ரமேஷின் மனைவியான ஷர்மிளாவும் அவரது நடத்தையில் உடன்பாடின்றி ஏற்கனவே பிரிந்து சென்றுவிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இக்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த செம்பியம் போலீசார், தீவிர விசாரணை நடத்தி பெண்ணின் தந்தையான திரு.வி.க. நகரைச் சேர்ந்த பாபுவை கைது செய்துள்ளனர். பெரம்பூர் பகுதியில் கள்ளத்தொடர்பு விவகாரத்தில் வாலிபர் குத்தி கொல்லப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

அடச்சீ… கள்ளக்காதலுக்கு தடையான பெற்ற மகன்… குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து… காரில் கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்… கர்நாடகாவில் அரங்கேறிய கொடூரம்…!

கர்நாடக மாநிலம் பெளகாவி மாவட்டத்தில் தன் கார் ஓட்டுநர் பிரியகரனுடன் சேர்ந்து வாழ, அதற்குத் தடையாக இருந்த சொந்த மகனையே…

16 minutes ago

BREAKING : தூத்துக்குடியை உலுக்கிய அதிரடி உத்தரவு…. ஸ்டெர்லைட் போராட்டக் குடும்பங்களுக்கு ரூ.5.25 கோடி வாரி வழங்கி முதல்வர் விஜய் அதிரடி….!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு எதிரான போராட்டத்தில் பாதிக்கப்பட்டு நீண்டகாலமாக நீதியை எதிர்நோக்கியிருந்த குடும்பங்களுக்குத் தமிழ்நாடு அரசு தற்போது ஒரு…

18 minutes ago

ஐயோ காப்பாத்துங்க… திடீரென சரிந்து விழுந்த லிஃப்ட்… அலறிய பெண்கள்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ… மகாராஷ்டிராவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கின் சட்பூர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் திடீரென லிஃப்ட் சரிந்து விழுந்த விபத்து அப்பகுதியில்…

21 minutes ago

“அன்பில் மகேஷை தொடர்ந்து அடுத்த குறி”…. சிவசங்கர் அதிரடி கைது?…. ரூ.3.35 கோடி மோசடி புகாரால் திமுக வட்டாரத்தில் பெரும் பதற்றம்….!

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், கடந்த திமுக ஆட்சிக்…

27 minutes ago

வா மச்சான் குடிக்க போலாம்… நம்பிப் போன வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்… நெஞ்சை நடுங்கவைக்கும் வீடியோ… சென்னையை உலுக்கிய திக் திக் சம்பவம்…!!

சென்னையில் காசிமேடு கடற்கரை அருகே தீபத் என்கிற சனி என்ற வாலிபர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும்…

34 minutes ago

“பெண் கலெக்டர் விவகாரம்”…. ஈசிஆர் ரிசார்ட்டில் விஜய் போட்ட அதிரடி மாஸ்டர் பிளான்….. ஆட்டம் காணும் தவெக எம்.எல்.ஏ-க்கள்….!

தவெக அரசு மீது பல்வேறு சர்ச்சைகளும் விமர்சனங்களும் எழுந்துள்ள நிலையில், கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மற்றும் துணை…

36 minutes ago