மும்பை இந்தியன்ஸில் இருந்து ரோகித் சர்மா அவுட்… பின்னணியில் இருக்கும் அந்த இளம் வீரர்… ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்…!

Spread the love

ஐபிஎல் கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போது டிரேடிங் குறித்த செய்திகள் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன. குறிப்பாக, கடந்த இரண்டு சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியாவை வெளியேற்ற நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகள் அவரை வாங்க ஆர்வம் காட்டி வரும் நிலையில், தற்போது அதைவிட ஒரு அதிர்ச்சி தகவலாக மும்பை அணியின் தூணாக விளங்கும் ரோகித் சர்மாவையும் டிரேடிங் மூலம் வெளியேற்ற பேச்சுவார்த்தை நடந்து வருவது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

39 வயதாகும் ரோகித் சர்மா விரைவில் ஓய்வு பெறக்கூடும் என்பதால், அவரது இடத்திற்கு எதிர்காலத்தை மனதில் வைத்து ஒரு தரமான இளம் தொடக்க வீரரை கொண்டு வர மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக அவர்கள் முதலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை குறிவைத்தனர். தொடக்கத்தில் ஹர்திக் பாண்டியாவை கொடுத்து ஜெய்ஸ்வாலை வாங்க டீல் பேசப்பட்டது. ஆனால், ஜெய்ஸ்வால் கேப்டன் பதவி கேட்டதாலும், ஹர்திக் பாண்டியா ராஜஸ்தான் அணிக்கு செல்ல விருப்பம் தெரிவிக்காததாலும் அந்த முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இருப்பினும், எப்படியாவது ஜெய்ஸ்வாலை அணியில் இணைக்க வேண்டும் என்ற முனைப்பில் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தற்போது மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் புதிய டீல் ஒன்றை பேசி வருகிறது. இந்த முறை ரோகித் சர்மாவை கொடுத்துவிட்டு ஜெய்ஸ்வாலை கேட்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்கு ராஜஸ்தான் அணி நிர்வாகம், “ரோகித் சர்மா ஓய்வு பெறும் தருவாயில் இருப்பதால், அவருடன் சேர்த்து இளம் வீரரான நமன் தீரையும் அனுப்பினால் மட்டுமே ஜெய்ஸ்வாலை விட்டுக்கொடுக்க முடியும்” என்று அதிரடி நிபந்தனை விதித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்தவரை நமன் தீரை விட்டுக்கொடுப்பதில் பெரிய தயக்கம் இல்லை என்றாலும், இந்த மிகப்பெரிய டிரேடிங் டீல் நடப்பது முழுமையாக ரோகித் சர்மாவின் கையில்தான் உள்ளது. மும்பை அணியை 5 முறை சாம்பியனாக்கிய ரோகித் சர்மா இந்த மாற்றத்திற்கு சம்மதம் தெரிவிப்பாரா என்பதைப் பொறுத்தே இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும். கடந்த 2020 ஆம் ஆண்டிற்குப் பிறகு கோப்பையை வெல்லாத மும்பை இந்தியன்ஸ் அணி, தனது எதிர்காலத்தை மறுகட்டமைப்பு செய்ய எடுக்கும் இந்த அதிரடி முடிவுகள் ஐபிஎல் அரங்கில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.

SATHISH R

Recent Posts

நீங்கதானே என்னை ஃபெயில் ஆக்குனீங்க?… ஆசிரியரின் வயிற்றில் கத்தியை இறக்கிய மாணவன்… பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், மாற்றுச் சான்றிதழ் வாங்குவது தொடர்பான தகராறில் 17 வயது…

2 minutes ago

தவெக எம்.எல்.ஏ-வுக்கு வலை வீசிய யூடியூபர்: நடுராத்திரியில் நடந்த அதிரடி கைது.. பின்னணியில் இருக்கும் அந்த ‘பெரிய கை’…. அலறும் அரசியல் வட்டாரம்….!

தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரை மாற்றுப் கட்சிக்கு இழுக்க பேரம் பேசி மிரட்டிய புகாரில், பிரபல யூடியூபரான ஐபிடிஎஸ்…

4 minutes ago

“என் மனைவி, மகளை நானே கொன்றேன்”…. தலை சிதறி இறந்து கிடந்த சிறுமி… தொழிலதிபர் வெளியிட்ட பகீர் வீடியோ… தர்மபுரியில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்….!

தர்மபுரியில் கடன் சுமை காரணமாக ரியல் எஸ்டேட் அதிபர் தனது மனைவி மற்றும் மகளைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, தானும்…

16 minutes ago

அம்மாவின் ஆனந்தக் கண்ணீர்… வரலாற்று வெற்றிக்கு பின் மொராக்கோ வீரர் செய்த ‘அந்த’ ஒரு காரியம்… உருகும் இணையம்…!

2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில், நெதர்லாந்து அணிக்கு எதிரான விறுவிறுப்பான பெனால்டி ஷூட்-அவுட் சுற்றில் மொராக்கோ அணி…

16 minutes ago

“புருஷன் கூட இருக்கும் போதே இப்படியா?”…. பேருந்தில் புதுமணப் பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்… மதுபோதையில் எல்லை மீறிய வாலிபர்…. அடுத்து நடந்த அந்த ஒரு சம்பவம்…!

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதுமணப் பெண்ணிற்கு நேர்ந்த பாலியல் தொல்லை மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பு சம்பவம்…

20 minutes ago

BREAKING: அடுத்த விக்கெட் அவுட்…. அதிமுகவில் இருந்து Ex அமைச்சர் விலகினார்… EPS-க்கு விழுந்த அந்த ஒரு ‘பலத்த’ அடி….!

அதிமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அறிவித்துள்ள செய்தி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து கட்சிகளும்…

25 minutes ago