தவெக எம்.எல்.ஏ-வுக்கு வலை வீசிய யூடியூபர்: நடுராத்திரியில் நடந்த அதிரடி கைது.. பின்னணியில் இருக்கும் அந்த ‘பெரிய கை’…. அலறும் அரசியல் வட்டாரம்….!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரை மாற்றுப் கட்சிக்கு இழுக்க பேரம் பேசி மிரட்டிய புகாரில், பிரபல யூடியூபரான ஐபிடிஎஸ் திருநாவுக்கரசு சென்னை காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். ஊத்தங்கரை தனித் தொகுதியின் தவெக எம்.எல்.ஏ இளையராஜா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த அதிகாரப்பூர்வ புகாரின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.

எம்.எல்.ஏ இளையராஜா தனது புகாரில், திருநாவுக்கரசு தன்னைத் தொடர்ந்து தொலைபேசி வாயிலாகவும், நேரடியாகச் சந்தித்தும் மாற்று அரசியல் கட்சியில் இணையுமாறு வற்புறுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். அதற்காகப் பெரும் தொகையை அவர் பேரம் பேசியதாகவும், அதற்குத் தான் உடன்பட மறுத்தபோது தனக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அதிர்ச்சியூட்டும் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். புகாரின் தீவிரத்தன்மையை உணர்ந்த சென்னை திருவல்லிக்கேணி போலீசார், அரும்பாக்கம் பகுதியில் தலைமறைவாக இருந்த திருநாவுக்கரசைக் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேர்தல் நேரங்களில் மக்கள் பிரதிநிதிகளைப் பண பலத்தால் விலைபேசி வாங்கும் சில பாரம்பரியக் கட்சிகளின் ‘குதிரை பேரம்’ மற்றும் இரட்டை வேட அரசியலை இச்சம்பவம் முழுமையாகத் தோலுரித்துக் காட்டியுள்ளது. எனினும், கொள்கை பலத்தோடு மக்கள் மத்தியில் மாஸாக வளர்ந்து வரும் தவெக-வின் மக்கள் பிரதிநிதிகளைப் பணத்தாலோ அல்லது மிரட்டலாலோ அவ்வளவு எளிதில் விலைக்கு வாங்கிவிட முடியாது என்பதை இந்தக் கைது நடவடிக்கை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. இந்தச் சதியின் பின்னணியில் இயங்கி வரும் முக்கிய அரசியல் தலைவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் தற்பொழுது தங்களது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

Nanthini

Recent Posts

கண்ணுக்கு கண் தண்டனை..! ஆசிட் பாட்டிலுடன் நின்ற பெண்… உலகையே அதிரவைத்த கிளைமாக்ஸ்… நீதிமன்றம் தந்த பழிவாங்கும் உரிமை…!!

2004-ஆம் ஆண்டில் ஈரானைச் சேர்ந்த அமனே பஹ்ராமி என்ற இளம் பொறியியல் பட்டதாரி, மஜித் மொவாஹெடி என்ற தனது சக…

1 second ago

திரும்பிப் போகவும் வழியில்லை… வாழவும் வழியில்லை..! நடுரோட்டில் தவிக்கும் இளம்பெண்ணின் கதறல்… வைரலாகும் வீடியோ பதிவு…!!

சத்தார்பூரைச் சேர்ந்த ஒரு இளம்பெண், காசியாபாத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார்.…

11 minutes ago

தவறு இருந்தால் FIR போடு… அடிக்க நீ யார்…? லாரி ஓட்டுநரை கைமுட்டியால் தாக்கிய ஓட்டுநர்… ரத்த வெள்ளத்தில் சரிந்த கொடூரம்…. இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள காஜுவாக்கா பகுதியில், போக்குவரத்துத் துறை பெண் ஆய்வாளர் பார்வதி என்பவரின் வாகன ஓட்டுநர்,…

20 minutes ago

“மாந்திரீக பயிற்சி…” கணவரின் கொன்று குடலை எடுத்து பையில் போட்ட பெண்…. நேரில் பார்த்து மிரண்ட ஓனர்…. குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ரா பகுதியில், 40 வயதான ராஜேஷ் என்பவரை அவரது மனைவி விமலா கத்தியால் பலமுறை குத்திக் கொடூரமாகக்…

29 minutes ago

ஆம்புலன்சில் வெடித்து சிதறிய ஆக்சிஜன் டியூப்… நெஞ்சு வலியால் துடித்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த ரேவதி (45) என்பவருக்கு திடீரெனக் கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.…

40 minutes ago

குடும்பத்தைக் காப்பாற்ற உழைத்த பெண்… இரவு 10 மணிக்கு அரங்கேறிய  கொடூரம்… காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. பகீர் சம்பவம்…!!

தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக இரவு நேரத்தில் உணவு அல்லது பொருட்களை விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த பெண் ஊழியர்…

53 minutes ago