2 சீட்டுனு கிண்டல் பண்ணீங்களே… இன்னைக்கு என்ன ஆச்சு… இனி நாங்கதான் சென்டர்… திமுக, அதிமுக-வை அதிரவைத்த திருமாவளவன்…!

Spread the love

மதுரை மாவட்டம் மேலவளவில் படுகொலை செய்யப்பட்ட முருகேசன் உள்ளிட்ட 6 பேரின் நினைவு நாளையொட்டி, அங்குள்ள மணிமண்டபத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் அமைச்சர் வன்னியரசு ஆகியோருடன் இணைந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிய அவர், இந்நிகழ்வு வெறும் சாதிப் பெருமை பேசுவதற்கோ அல்லது சம்பிரதாயமாக இரங்கல் தெரிவிப்பதற்கோ ஆனது அல்ல என்றும், கடந்த ஓராண்டில் நாம் என்ன சாதித்தோம், எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறோம் என்பதை சுயபரிசோதனை செய்துகொள்ளும் ஒரு முக்கியக் களம் என்றும் குறிப்பிட்டார். அத்தோடு, வஞ்சமும் சூதும் சூழ்ச்சிகளும் நிறைந்த அரசியல் களத்தில், தன் மீது நம்பிக்கை வைத்து உடன் பயணிக்கும் தொண்டர்களுக்குத் தனது நெஞ்சார்ந்த நன்றியினையும் அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.

தனது அரசியல் பயணத்தில் எதிர்கொண்ட விமர்சனங்களுக்கும் அவதூறுகளுக்கும் மேடையில் பதிலடி கொடுத்த திருமாவளவன், “முன்பெல்லாம் தலித் அரசியல் பற்றிப் பேசப் பயந்த நிலையில், இன்று தமிழக அரசியல் தலைகீழாக மாறியுள்ளது” என்றார். ஒரு தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை முதலமைச்சர் வேட்பாளராகப் பார்க்கும் நிலையை விசிக உருவாக்கியுள்ளது என்று பெருமிதம் கொண்ட அவர், கடந்த காலங்களில் தங்களை இரண்டு சீட்டு, மூன்று சீட்டு என்று கிண்டல் செய்தவர்களுக்குத் தங்களின் தற்போதைய அரசியல் பலமே சான்றாக மாறியுள்ளது எனச் சுட்டிக்காட்டினார். எந்தவொரு பின்புலமும் இன்றி சாதி வெறியர்கள், அதிகார வர்க்கம், மற்றும் ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைகளைத் தாங்கி, இன்று தமிழக அரசியலின் மையப்புள்ளியாக விசிக உருவெடுத்துள்ளது என்றும் அவர் பெருமிதத்துடன் முழங்கினார்.

தேர்தல் அரசியலில் விசிகவின் தீர்மானிக்கும் ஆற்றலை வலியுறுத்திய அவர், “இனி சிறுத்தைகள் இல்லாமல் தமிழ்நாடு அரசியல் இயங்காது; இதை நான் ஆணவத்தோடு சொல்லவில்லை, அரசியலின் நாடி பிடித்துச் சொல்கிறேன், ஜோசியம் சொல்லவில்லை” என அதிரடியாகக் குறிப்பிட்டார். மேலும், திமுக உள்ளிட்ட பெரிய கட்சிகளிலேயே சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கு சீட்டு மறுக்கப்படும் சூழலில், தங்களுக்குக் கிடைக்கும் குறைவான தொகுதிகளில் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டி, தாம் துணிச்சலான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளதாகக் விளக்கமளித்தார். எத்தனையோ பேர் அவதூறுகளைப் பரப்பிவிட்டு கட்சியை விட்டு வெளியேறினாலும், மேலவளவு மண் எப்போதும் விசிகவின் பக்கமே நிற்கிறது என்பதை நிரூபித்துள்ளதாகக் கூறி தனது உரையை அவர் நிறைவு செய்தார்.

Visaka

Recent Posts

“கல்விக் குழுவா? அரசியல் களமா?”.. அனந்த்ஜித் நியமனத்தால் வெடித்த சர்ச்சை… அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி பின்னணி…. விஜய்க்கு அடுத்த சிக்கல்…!

தமிழகப் பள்ளிப் பாடநூல் தயாரிப்பிற்கான புதிய குழுவில், தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தி தொடர்பாளர் கே.எஸ்.டி. அனந்த்ஜித் நியமிக்கப்பட்டுள்ள விவகாரம்…

2 minutes ago

உணவும் தண்ணீரும் இன்றி 6 நாட்கள் மரணப் போராட்டம்… இடிபாடுகளுக்குள் இருந்து மீண்ட 3 வயது சிசு…. உலகையே உலுக்கிய அதிசயம்….!

வெனிசுலாவில் கடந்த புதன்கிழமை ஒரு நிமிடத்திற்கும் குறைவான இடைவெளியில் அடுத்தடுத்து ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரு…

5 minutes ago

“புதுசா ஒரு சாம்ராஜ்யம் உருவாகுது”… விஜய் தொடங்கிய புதிய கூட்டணியின் பெயர் இதுதானா?… ஆடிப்போன அரசியல் களம்… தவெக கூட்டணியில் இணையும் 3 முக்கிய கட்சிகள்…!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ், விசிக, IUML ஆகிய கட்சிகள்…

9 minutes ago

“இப்போ தங்கம் வாங்காதீங்க”… ஆனந்த் சீனிவாசன் சொன்ன அந்த ஒரு ரகசியம்… அதிர்ச்சியில் பொதுமக்கள்…!

தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவதால், பொதுமக்கள் மத்தியில் அதை வாங்குவதற்கான ஆர்வம் அதிகரித்துள்ள வேளையில், "தற்போது தங்கம் வாங்க…

10 minutes ago

அடக்கொடுமையே… ஐந்தாம் வகுப்பு புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாடல்… கல்வித்துறையின் அலட்சியம்… அதிரடி ஆக்ஷனில் இறங்கிய முதல்வர்…!

ஒடிசா மாநில அரசுப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடப்புத்தகத்தில், 'ஹம் தில் தே சுகே சனம்' என்ற புகழ்பெற்ற…

36 minutes ago