அமித் ஷா போட்ட அதிரடி ஸ்கெட்ச்! நள்ளிரவில் வந்த போன் கால்… பதறியடித்து டெல்லி ஓடும் ஆளுநர் அர்லேக்கர்…!

Spread the love

தமிழகத்தின் முழுநேர ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி அண்மையில் மேற்கு வங்க மாநிலத்திற்கு மாற்றப்பட்டதை அடுத்து, கேரள ஆளுநராக இருக்கும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராகக் கூடுதல் பொறுப்பேற்றார். இரு மாநிலங்களின் அரசு நிர்வாகத்தையும் ஒரே நேரத்தில் கவனிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் பணிச்சுமை குறித்து அவர் அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் விவரித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, தமிழகத்திற்கு நீண்ட காலத்திற்குப் பொறுப்பு ஆளுநரை நியமித்திருப்பது சரியாக இருக்காது எனப் பிரதமர் நரேந்திர மோடியுடன் அமித் ஷா ஆலோசித்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழலில், தமிழகத்திற்குப் புதிய முழுநேர ஆளுநரை நியமிப்பது குறித்து முக்கிய முடிவெடுப்பதற்காகப் பொறுப்பு ஆளுநர் அர்லேக்கருக்கு டெல்லியிலிருந்து அவசர அழைப்பு வந்துள்ளது. அதன் பேரில் இன்று டெல்லி செல்லும் அவர், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசவுள்ளார். இந்தச் சந்திப்பின் போது, தமிழ்நாடு அல்லது கேரளா ஆகிய இரு மாநிலங்களில் எங்கு முழுநேர ஆளுநராகப் பணியாற்ற அவர் விரும்புகிறார் என்ற விருப்பம் கேட்கப்பட்டு, அதன் அடிப்படையிலேயே இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

மத்திய அரசின் இந்த அதிரடி நகர்வால், தமிழகத்திற்குப் புதிய ஆளுநர் நியமிக்கப்படுவாரா அல்லது அர்லேக்கரே முழுநேர ஆளுநராக நீடிப்பாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. இதற்கிடையே, அர்லேக்கர் தமிழகத்தின் முழுநேர ஆளுநராகப் பணியாற்றவே அதிக விருப்பம் காட்டி வருவதாக சென்னை ராஜ் பவன் அதிகாரிகள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது. அவரது இந்த டெல்லிப் பயணத்தின் முடிவில், தமிழக ஆளுநர் நியமனம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

Visaka

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

5 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

5 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

5 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

6 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

6 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

6 மணத்தியாலங்கள் ago