சட்டம் எல்லாருக்கும் சமம்தா..! ஹெல்மெட் எங்கே மேடம்..? என் தம்பிக்கு ₹6,000 ஃபைன்.. அப்போ உங்களுக்கு..? பெண் போலீஸை வறுத்தெடுத்த வாலிபர்…!

Spread the love

பீகாரின் மதுபனி பகுதியில் பெண் காவல்துறை கண்காணிப்பாளர் (SP) ஒருவர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. சாலையில் சென்ற ஒரு நபர், அந்த பெண் அதிகாரியைத் தன் மொபைலில் வீடியோ எடுத்ததோடு, “என் சகோதரனுக்கு ஹெல்மெட் அணியாததற்காக 6,000 ரூபாய் அபராதம் விதித்தீர்கள், இப்போது இந்த அதிகாரிக்கு யார் அபராதம் விதிப்பது?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த வீடியோவில், அந்த நபர் பெண் எஸ்பியை பின்தொடர்ந்து சென்று சட்டம் அனைவருக்கும் சமமானது என்பதை உரக்கக் கூறுகிறார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் அதிகாரி, உடனடியாக வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, தன் தவறை மறைப்பதற்காக அங்கிருந்த ஒருவரிடமிருந்து ஹெல்மெட்டை வாங்கி அணிந்து கொள்ள முயற்சிப்பதை வீடியோவில் தெளிவாகக் காண முடிகிறது.

சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய உயர் அதிகாரியே விதிமுறைகளை மீறியதும், அதை ஒரு சாமானிய மனிதன் தைரியமாக தட்டிக்கேட்டதும் இணையத்தில் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி மீது காவல்துறை நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவருக்கும் உரிய அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Swetha

Recent Posts

“இது உன் அப்பன் வீட்டுப் பூங்காவா…?” நாங்க தான் குரங்கோட இடத்தை ஆக்கிரமிச்சோம்…! – இணையத்தை உலுக்கும் காரசார வாக்குவாதம்…!!

அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…

5 மணத்தியாலங்கள் ago

“நாங்கள் விற்காவிட்டால்… எவனும் விற்க முடியாது…!” – அமெரிக்காவை அலறவிடும் ஈரான்…! ஹார்முஸ் ஜலசந்தியை முடக்க திட்டம்…? தீவிரமடையும் உலகப்போர் அபாயம்…!!

தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…

5 மணத்தியாலங்கள் ago

“யாரும் எதிர்பார்க்காத திருப்பம்…! இனி நோ கேன்சர்… பெண்களுக்காக கர்நாடகா அரசு போட்ட மாஸ்டர் பிளான்…!”

பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…

5 மணத்தியாலங்கள் ago

“தமிழக பெண்களுக்கு ஜாக்பாட்… இலவச பேருந்து பயணம்…? மகளிர் உரிமைத் தொகை ரூ 2,500 உயர்வு எப்போது…?” – 2 வாரத்தில் வரப்போகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…

5 மணத்தியாலங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்களின் கவனத்திற்கு…! கைரேகை பதிவு செய்யாவிட்டால் பெயர் நீக்கமா…? விளக்கம் கொடுத்த அதிகாரிகள்…!!

தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…

5 மணத்தியாலங்கள் ago

“இது என்னடா புதுசா…”அரங்கம் அதிர வைக்க வந்த ரசிகர்கள்… ‘செக்’ வைத்த திரையரங்கம்… ரசிகர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… அறந்தாங்கியில் உச்சகட்ட பரபரப்பு…!

சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…

5 மணத்தியாலங்கள் ago