Categories: சினிமா

“யானையை குறி வைப்போம், கழுகை கண்டுக்க வேண்டாம்” – குட்டி ஸ்டோரி மூலம் ரஜினியை தாக்கிய விஜய்..

Spread the love

சென்னை நேரு இன்டோர் ஸ்டேடியத்தில், நேற்றிரவு லியோ படம் வெற்றிவிழா நடந்தது. தயாரிப்பாளர் லலித்குமார், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், திரிஷா, அர்ஜூன், மன்சூர் அலிகான், கவுதம் மேனன் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விழாவில், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் விஜய் பேசினார். அப்போது ஜெயிலர் பட விழாவில் ரஜினி சொன்ன காக்கா – கழுகு கதைக்கு பதில் சொல்வது போல் மறைமுகமான நடிகர் ரஜினியை தாக்கினார்.விழாவில் விஜய் பேசுகையில், ரசிகர்கள் அதிகமாக கோபப்பட கூடாது. சமூக வலைதளங்களில் உங்கள் கோபத்தை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். யார் மனதையும் நாம் புண்படுத்தக் கூடாது. நமக்கு நிறைய வேலைகள் இருக்கிறது.
ஒரு காட்டுக்குள் ரெண்டு பேர் வேட்டைக்கு போனார்கள். அங்கு சிங்கம், புலி, கரடி, கழுகு, மான், முயல் எல்லாம் இருந்தது. ஒருவர் முயலை வேட்டையாடினார். ஒருவர் யானைக்கு குறி வைத்தார். மிஸ் ஆகி விட்டார்.ஊருக்குள் இரண்டு பேர் திரும்பி வந்தபோது, ஒருவர் கையில் முயல் இருந்தது. மற்றொருவர் கையில் வேல் இருந்தது. முயலை வேட்டையாடியவரை விட யானையை குறிவைத்தவரே வெற்றியாளர். அதனால் நாம் பெரிய வெற்றிகளை அடைவோம் என்று விஜய் பேசினார். இந்த கதையில் காட்டுக்குள் கழுகு இருந்தது என்று சொல்லும்போது, சில விநாடிகள் பேச்சை நிறுத்திவிட்டு மைக்கை விட்டு தள்ளிச்சென்றுவிட்டு மீண்டும் வந்து விஜய் பேசினார். அதாவது கழுகு காட்டுக்குள் இருந்தாலும் அதை வேட்டைக்காரன் (விஜய் நடித்த படம்) கண்டுகொள்ளவில்லை. கழுதை அலட்சியப்படுத்திவிட்டு யானையை குறிவைத்தான் என்பதை சூசகமாக சொல்லி, ரஜினியை தாக்கிவிட்டு, யானை (அரசியல்) தான் என் குறிக்கோள் என்பதையும் மறைமுகமாக சொல்லிவிட்டார் விஜய்.

admin

Recent Posts

“திருட வந்தது ஒரு குத்தமாடா”… திருடர்களுக்கு கொடுக்கப்பட்ட வினோத தண்டனை… கனவுல கூட நினைச்சிருக்க மாட்டாங்க… இணையத்தை கலக்கும் வீடியோ…!

இந்தோனேசியாவில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில், தொடர் திருட்டுகளால் கடுப்பாகிப் போயிருந்த பொதுமக்கள் நள்ளிரவில் கடையொன்றுக்குள் புகுந்த நான்கு கொள்ளையர்களைக்…

2 minutes ago

இனி ரேஷன் கடைக்கு போக வேண்டாம்… சென்னைவாசிகளுக்கு அரசு கொடுத்த செம சர்ப்ரைஸ்… உடனே தேதி நோட் பன்னிவச்சுகோங்க…!

தமிழக முதலமைச்சரின் "தாயுமானவர் திட்டத்தின்" கீழ், 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று…

8 minutes ago

“ஆதரவை விலக்கிக்கிட்டு தாராளமா போங்க…!” கூட்டணிக் கட்சிகளுக்கு முதல்வர் விஜய் கொடுத்த ‘மரண மாஸ்’ பதிலடி..! அதிர்ச்சியில் உறைந்த தமிழக அரசியல்…!!

தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே, கூட்டணி கட்சிகளுடன் பட்ஜெட் கூட்டத்தொடர், நிர்வாக…

9 minutes ago

நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி… குஜராத்தில் பைக்கருக்கு நேர்ந்த பயங்கரம்… மழைநீருக்குள் மறைந்திருந்த எமன்…!

குஜராத் மாநிலம் ஜுனாகத் பகுதியில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், தம்பதியர் இருவர் தங்களது மோட்டார்…

10 minutes ago

“கூட்டணிக்கு குட்பை…? “திமுக தனித்துப் போட்டி…?! ஸ்டாலினின் அதிரடி முடிவு… தமிழக அரசியலில் உடையும் மாபெரும் கூட்டணி…!!”

தமிழக அரசியல் களத்தில் கூட்டணிகள் வேகமாக மாறிவரும் நிலையில், வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளை ஒதுக்காமல்…

18 minutes ago

“அடி தாங்க மாட்டீங்க”… சவால் விட்ட மாணிக்கம் தாகூர்… “நீங்க இன்னும் ICU-ல தான் இருக்கீங்க”… கிழித்துத் தொங்கவிட்ட திமுக எழிலரசன்…!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக, காங்கிரஸ் இடையேயான கூட்டணி முறிந்ததைத் தொடர்ந்து, இரு கட்சிகளுக்கும் இடையே கடுமையான…

19 minutes ago