Categories: சினிமா

சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு சொந்தம் – லியோ பட விழாவில் ரசிகர்களுக்கு பதில் சொன்ன விஜய்

Spread the love

நடிகர் விஜய், துவக்கத்தில் இளையதளபதி விஜய் என அழைக்கப்பட்டார். தற்போது தளபதி என அழைக்கப்படுகிறார். இதற்கிடையே, வாரிசு பட விழாவில் பேசிய சிலர், விஜய்தான் இப்போது தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று கூற, ஏற்கனவே சூப்பர் ஸ்டார் என ரஜினிகாந்த் அழைக்கப்படும் நிலையில், விஜய் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம், ரசிகர்களிடையே பரபரப்பை ஏறபடுத்தியது. இதனால் ரஜினி, விஜய் ரசிகர்களிடையே மோதல் போக்கு உருவானது. சமூக வலைதளங்களில் இருதரப்பு ரசிகர்களும் கடுமையான விமர்சித்துக் கொண்டனர்.

இந்நிலையில் ரஜினி நடித்த ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, காக்கா – கழுகு கதை ஒன்றை சொல்ல, அதில் கழுகு ரஜினி, காக்கா விஜய் என சமூக வலைதளங்களில் பரவி, மேலும் இந்த சூப்பர் ஸ்டார் பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. ஜெயிலர் படத்தை விட, லியோ வசூல் சாதனை படைக்க வேண்டும். ரஜினியை விட விஜய் பெரிய நடிகர் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று, விஜய் ரசிகர்கள் பயங்கர அலப்பரையில் ஈடுபட்டு வந்த நிலையில், இந்த பிரச்னைக்கு லியோ பட வெற்றி விழாவில் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நடிகர் விஜய்.

லியோ பட விழாவில் விஜய் பேசுகையில், புரட்சி தலைவருன்னா அவர் ஒருத்தர்தான், நடிகர் திலகமுன்னா அவர் ஒருத்தர்தான், புரட்சிக் கலைஞர் கேப்டன்னா அவர் ஒருத்தர்தான், உலகநாயகன்னா அவர் ஒருத்தர்தான், சூப்பர் ஸ்டாருன்னா அவர் ஒருத்தர்தான். தல அப்படின்னா அவர் ஒருத்தர்தான். தளபதிக்கு என்ன அர்த்தம் என்றால், மன்னருக்கு கீழ் அவர் இருப்பார். மன்னர் சொல்லும் ஆணைகளை அவர் செய்து முடிப்பார். என்னை பொருத்த வரை, ரசிகர்களாகிய நீங்கள்தான் என் மன்னர்கள். நான் உங்களுக்கு கீழ இருக்கிற தளபதி. நான் இப்படியே தளபதியாக இருந்து விடுகிறேன். நீங்கள் ஆணையிடுங்க, அந்த வேலையை நான் செஞ்சுவிட்டு போகிறேன், என்று பேசி இருக்கிறார் நடிகர் விஜய்.

admin

Recent Posts

சாதாரண வயிறு வலின்னு அலட்சியப்படுத்தாதீங்க… 8 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்ட கட்டி… ஷாக்கான மருத்துவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…

13 minutes ago

ஐயோ கடவுளே… கடலில் சுறாவை செல்லமாகத் தடவ முயன்ற பெண்… நொடியில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!

ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…

17 minutes ago

எவ்வளவு அடிச்சாலும் உடையாதுடா… கடையை நொறுக்கப் பார்த்த… கும்பலுக்கு லூயிஸ் வியூட்டன் கொடுத்த ஷாக் பதிலடி… பிரான்ஸில் நடந்த சம்பவம்…!

பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது லூயிஸ் வியூட்டன் கடை மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது.…

22 minutes ago

ரூ.1.45 கோடி கார்ப்பரேட் வேலையை தூக்கி எறிந்த பெண்… 4 மாத நாய் நடைப்பயிற்சி தந்த மாபெரும் மாற்றம்… இணையத்தின் ஹாட் டாபிக்…!!

அமெரிக்காவில் மிக அதிக சம்பளம் தந்த கார்ப்பரேட் மார்க்கெட்டிங் வேலையைத் துறந்து, நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் தொழிலை தொடங்கிய…

39 minutes ago

அய்யய்யோ… யாரும் பாக்கலன்னு நினைச்சியாடா?… பட்டப்பகலில் கச்சிதமாக ஸ்கெட்ச் போட்டு… மஹிந்திரா தார் டயரை தூக்கிய நபர்… CCTV-யில் சிக்கிய வீடியோ வைரல்…!!

ஹைதராபாத்தின் மலாக்பேட் பகுதியில் உள்ள அக்பர் பாஹ் இடத்தில் பட்டப்பகலில் பரபரப்பான ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது. அங்கே நிறுத்தப்பட்டிருந்த…

41 minutes ago