Connect with us

CINEMA

“யானையை குறி வைப்போம், கழுகை கண்டுக்க வேண்டாம்” – குட்டி ஸ்டோரி மூலம் ரஜினியை தாக்கிய விஜய்..

சென்னை நேரு இன்டோர் ஸ்டேடியத்தில், நேற்றிரவு லியோ படம் வெற்றிவிழா நடந்தது. தயாரிப்பாளர் லலித்குமார், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், திரிஷா, அர்ஜூன், மன்சூர் அலிகான், கவுதம் மேனன் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விழாவில், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் விஜய் பேசினார். அப்போது ஜெயிலர் பட விழாவில் ரஜினி சொன்ன காக்கா – கழுகு கதைக்கு பதில் சொல்வது போல் மறைமுகமான நடிகர் ரஜினியை தாக்கினார். Actor Vijayவிழாவில் விஜய் பேசுகையில், ரசிகர்கள் அதிகமாக கோபப்பட கூடாது. சமூக வலைதளங்களில் உங்கள் கோபத்தை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். யார் மனதையும் நாம் புண்படுத்தக் கூடாது. நமக்கு நிறைய வேலைகள் இருக்கிறது.
ஒரு காட்டுக்குள் ரெண்டு பேர் வேட்டைக்கு போனார்கள். அங்கு சிங்கம், புலி, கரடி, கழுகு, மான், முயல் எல்லாம் இருந்தது. ஒருவர் முயலை வேட்டையாடினார். ஒருவர் யானைக்கு குறி வைத்தார். மிஸ் ஆகி விட்டார். Actor Vijayஊருக்குள் இரண்டு பேர் திரும்பி வந்தபோது, ஒருவர் கையில் முயல் இருந்தது. மற்றொருவர் கையில் வேல் இருந்தது. முயலை வேட்டையாடியவரை விட யானையை குறிவைத்தவரே வெற்றியாளர். அதனால் நாம் பெரிய வெற்றிகளை அடைவோம் என்று விஜய் பேசினார். இந்த கதையில் காட்டுக்குள் கழுகு இருந்தது என்று சொல்லும்போது, சில விநாடிகள் பேச்சை நிறுத்திவிட்டு மைக்கை விட்டு தள்ளிச்சென்றுவிட்டு மீண்டும் வந்து விஜய் பேசினார். அதாவது கழுகு காட்டுக்குள் இருந்தாலும் அதை வேட்டைக்காரன் (விஜய் நடித்த படம்) கண்டுகொள்ளவில்லை. கழுதை அலட்சியப்படுத்திவிட்டு யானையை குறிவைத்தான் என்பதை சூசகமாக சொல்லி, ரஜினியை தாக்கிவிட்டு, யானை (அரசியல்) தான் என் குறிக்கோள் என்பதையும் மறைமுகமாக சொல்லிவிட்டார் விஜய்.

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top