நடிகை ஸ்ரேயா ரெட்டி கடந்த 2002-ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் விக்ரம் நடித்த சாமுராய் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி திரையுலகில் என்ட்ரி கொடுத்தார்.
இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். விஷால் நடித்த திமிரு திரைப்படத்தில் ஸ்ரேயா ரெட்டி நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அவருக்கு புகழை தேடித்தந்தது திமிரு திரைப்படத்தின் வில்லி கதாபாத்திரம் தான். இதனையடுத்து வெயில், பள்ளிக்கூடம், காஞ்சிவரம் உள்ளிட்ட படங்களில் ஸ்ரேயா தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.
அடுத்தடுத்து தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் பிற மொழி படங்களில் கவனம் செலுத்தினார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா ரெட்டி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.
தற்போது வெள்ளை நிற புடவையில் ஸ்ரேயா பகிர்ந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவிக்கின்றனர் .