பிரபல நடிகரான விக்ரம் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதுவரை இல்லாமல் வித்தியாசமான கேரக்டரில் விக்ரம் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக வீர தீர சூரன் படத்தில் விக்ரம் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

#image_title
இந்த நிலையில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா புறநானூறு என்ற படத்தில் நடிக்க இருந்தார். ஏற்கனவே சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரை போற்று சூப்பர் ஹிட் ஆனது. ஆனால் புறநானூறு படத்தின் கதை சரியில்லை என்று கூறி சூர்யா வேறு ஒரு நாவலை கொடுத்து அந்த நாவல் மிகவும் நன்றாக இருக்கிறது இதை வேண்டுமென்றால் படித்து பாருங்கள்.
இதை படமாக்கலாம் என சுதாவிடம் கூறியதாக தெரிகிறது. ஆனால் சுதாவுக்கு அதில் விருப்பமில்லை. இதற்கிடையே விக்ரமும் சிவகார்த்திகேயனும் சுதா கொங்கராவுடன் கூட்டணி வைக்க முயற்சி செய்து வருகிறார்களாம்.
சமீபத்தில் கூட விக்ரமும் சுதாவும் சந்தித்ததாக கூறப்படுகிறது. இதனால் விக்ரமை வைத்து சுதா புறநானூறு படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எப்படி இருந்தாலும் வீர தீர சூரன் படத்தின் ஷூட்டிங் முடித்துவிட்டு சுதா இயக்கும் படத்தில் விக்ரம் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.