Connect with us
Ujala

HISTORY

அன்று Rs.5000 முதலீடு இன்று 1800 கோடி வர்த்தகம்..சொட்டு நீலம் பிஸினஸில் மளமள வளர்ச்சி.. சாதித்த உஜாலா

ஒரு காலத்தில் வீட்டில் துணிகளைத் துவைக்க வெறும் சோப்புகளை மட்டுமே நம்பியிருந்த வேளையில் திடீரென மார்க்கெட்டில் இறங்கி வீதி வீதியாகச் சென்று தனது நிறுவன பிராண்டை விளம்பரப்படுத்தி பொதுமக்களை வாங்க வைத்து இன்று வெளுக்கும் வெள்ளைத் துணிகளின் ராஜவாக இருக்கிறது உஜாலா சொட்டு நீலம்.

தமிழர்களின் பாரம்பரிய உடையான வெள்ளை வேட்டி, சட்டையை அவர்கள் அடிக்கடி பயன்படுத்துவதால் அதனால் விரைவிலேயே அதன் வெண்மைத் தன்மை மங்கி அழுக்கு படிந்த கலரில் காணப்படுவது வழக்கம். இதற்கு முடிவு கட்ட விரும்பினார் கேரளாவைச் சேர்ந்த ராமச்சந்திரன்.

   

1983-களில் ஒரு தனியார் கம்பெனியில் மாதச் சம்பளத்திற்கு வேலைக்கு இருந்தவர் சொந்தமாகத் தொழில் தொடங்க எண்ணி ரூ.5000 முதலீட்டில் டிடர்ஜெண்ட் பவுடர், டிடர்ஜெண்ட் ஒயிட்னர் போன்றவற்றைத் தயாரிக்கும் கம்பெனியை நிறுவினார். தனது நிறுவனத்திற்கு உஜாலா சுப்ரீம் லிக்விட் ஃபேப்ரிக் ஒயிட்னர் என்று பெயரிட்டு தனது விற்பனையைத் தொடங்கினார். எனினும் இவருக்கு இது போதிய திருப்தியைத் தரவில்லை.

எனவே பெண்களை வேலைக்கு எடுத்தார். தனது நிறுவன பிராண்டுகளை வீடு வீடாகச் சென்று விற்பனை செய்வதற்காக அவர்களை நியமித்து பிராண்டை விளம்பரப்படுத்தினார். இவரின் இடைவிடாத உழைப்பு காரணமாக நிறுவனம் மளமளவென வளர்ச்சி கண்டது. பெண்களும் உஜாலாவின் தயாரிப்பை விரும்பி வாங்கிப் பயன்படுத்த ஆரம்பித்தனர்.

தோல்வி மேல் தோல்வி.. ஆன்லைன் ஷாப்பிங் உலகின் அரசனாக திகழும் Alibaba. com உருவான வரலாறு..

தனது தொழிலை விரிவுபடுத்த எண்ணிய ராமச்சந்திரன் 20 நாடுகளில் தனது பிராண்டை அறிமுகப்படுத்தினார். அனைத்து இடங்களிலும் உஜாலாவிற்கு பெரியவரவேற்பு கிடைக்க தனது நிறுவனத்தினை 1997-ல் ஜோதி லேபரட்டரீஸ் என்று மாற்றி கார்ப்பரேட் உலகில் நுழைந்தார். இதன் மூலம் டிடர்ஜெண்ட் பொருட்கள் மட்டுமல்லாது மேக்ஸோ என்ற கொசுவிரட்டியை அறிமுகம் செய்தார். 35 கோடியில் தயாரிக்கப்பட்ட அந்தப் பொருள் பின்னாளில் 300 கோடிவரை வருவாய் ஈட்டியது. மேலும் Pril, Henko, Margo போன்ற பொருட்களையும் அறிமுகம் செய்து வெற்றி கண்டார்.

இப்படி ஒவ்வொன்றாக தனது பிராண்டுகளை அவர் அறிமுகப்படுத்த எளிய மக்கள் வாங்குவதற்கு ஏற்றதாக விலையும் இருந்தது. இதனால் மிடில் கிளாஸ் முதல் ஹைகிளாஸ் வரை உஜாலா சொட்டு நீலத்திற்கு அமோக வரவேற்பு இருந்தது.

இவ்வாறு மக்களின் நிலை அறிந்தும், அவர்களுக்கத் தேவையான நுகர்வோர் பொருளை சந்தையில் அறிமுகப்படுத்தியும் வெற்றி கண்ட ராமச்சந்திரன் இன்று ஆண்டுக்கு 1800 கோடிவரை வர்த்தகம் செய்யும் கம்பெனியின் முதலாளியாக உயர்ந்துள்ளார்.

Continue Reading

More in HISTORY

To Top