கரூர் மாவட்ட மக்கள் சந்திப்பு நிகழ்வில் தமிழக முதலமைச்சர் விஜய் எதிர்க்கட்சிகளையும், கடந்த கால ஊழல் அமைப்புகளையும் கடுமையாகச் சாடிப் பேசியுள்ளார். சட்டப்பேரவையில் தான் ‘பார்டி பஃண்ட்’ (Party Fund) என்று பொதுப்படையாகக் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், அது எந்தக் கட்சிக்கான நிதி என்று கூட தான் விளக்கவில்லை என்றும், ஆனால் அதற்குள் சிலர் பதற்றமடைந்து ஓட்டம் பிடித்தனர் என்றும் கிண்டலாகக் குறிப்பிட்டார். மேலும், தனது அரசியல் பயணத்தில் ‘கரூர் சம்பவம்’ என்பது ஒரு மிகப்பெரிய வலி என்று உருக்கமாகப் பகிர்ந்துகொண்ட அவர், காவல்துறையினர் தங்களை நெடுஞ்சாலையிலிருந்து பாதுகாப்பாக அழைத்து வருவது போல நடித்த நாடகத்தை அன்று தான் நம்பி ஏமாந்துவிட்டதாகக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து ஊழல் ஒழிப்பு குறித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், “ஊழலை எல்லாம் ஒழிக்க முடியாது, அது மக்களின் ரத்தத்திலேயே கலந்திருக்கிறது” என்று சவால் விட்டவர்கள் அனைவரும் தற்போதுள்ள அரசு அலுவலகங்களுக்குச் சென்று பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இன்று அரசு அலுவலகங்களில் ஒரு ரூபாய் கூட லஞ்சம் இல்லாத நிலை உருவாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த காலங்களில் தோண்டத் தோண்ட வெளிவரும் பல கோடி ரூபாய் ஊழல்களைக் கண்டு மக்கள் தங்களின் பக்கம் நிற்பதாகக் கூறினார். மக்கள் ஆதரவு தங்களுக்கு முழுமையாக இருக்கும்போது, எதற்காக தங்களை வீழ்த்த ‘குதிரை பேரம்’ மற்றும் ‘ஒட்டக பேரம்’ போன்ற குறுக்கு வழிகளை சிலர் தேடுகிறார்கள் என்றும் அவர் தனது உரையில் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…
தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…
பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…
தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…
தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…
சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…