கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் நடந்து ஒன்பது மாதங்கள் கடந்துள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய் இன்று (ஜூலை 10) கரூர் சென்றுள்ளார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்றடைந்த அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக கரூர் சென்றார். வழியெங்கும் தவெக தொண்டர்களும் பொதுமக்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த கரூர்ப் பயணத்தின் போது, புதிய தொழிற்துறைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் விஜய், கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 32 உறுப்பினர்களுக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி நியமன ஆணைகளையும் நேரில் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் உரையாற்றிய முதல்வர் விஜய், வலியோடு இருந்த என்னை ஓடி ஒளிந்து விட்டேன் என கூறுவதா, பணமா ஜனமா என என்னை கேட்டால் ஜனம் தான் முக்கியம் என நான் கூறுவேன் என்று உருக்கமாக பேசிய முதல்வர் கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…
தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…
பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…
தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…
தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…
சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…