“41 உயிர்கள்… 9 மாதக் காத்திருப்பு”… கரூரில் இன்று அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்… மாஸ் காட்டிய CM விஜய்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Spread the love

கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் நடந்து ஒன்பது மாதங்கள் கடந்துள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய் இன்று (ஜூலை 10) கரூர் சென்றுள்ளார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்றடைந்த அவர், அங்கிருந்து சாலை மார்க்கமாக கரூர் சென்றார். வழியெங்கும் தவெக தொண்டர்களும் பொதுமக்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த கரூர்ப் பயணத்தின் போது, புதிய தொழிற்துறைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் விஜய், கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 32 உறுப்பினர்களுக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி நியமன ஆணைகளையும் நேரில் வழங்கினார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப் பணி வழங்கும் இந்த நிகழ்வுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது. எனினும், இந்த நியமனங்கள் அனைத்தும் தற்காலிகமானவை என்றும், நீதிமன்றத்தின் இறுதி ஆய்வுக்கு உட்பட்டவை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், பொதுவான வேலைவாய்ப்பு விதிகளின்படி இதுபோன்ற நியமனங்களுக்கான வழிகாட்டுதல்கள் இந்த வழக்கில் முறையாகப் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து விளக்கமான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி (TNPSC) அமைப்பையும் இந்த வழக்கில் நீதிமன்றமே தாமாக முன்வந்து இணைத்துள்ள நிலையில், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் ஜூலை 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

“இது உன் அப்பன் வீட்டுப் பூங்காவா…?” நாங்க தான் குரங்கோட இடத்தை ஆக்கிரமிச்சோம்…! – இணையத்தை உலுக்கும் காரசார வாக்குவாதம்…!!

அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…

3 மணத்தியாலங்கள் ago

“நாங்கள் விற்காவிட்டால்… எவனும் விற்க முடியாது…!” – அமெரிக்காவை அலறவிடும் ஈரான்…! ஹார்முஸ் ஜலசந்தியை முடக்க திட்டம்…? தீவிரமடையும் உலகப்போர் அபாயம்…!!

தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…

3 மணத்தியாலங்கள் ago

“யாரும் எதிர்பார்க்காத திருப்பம்…! இனி நோ கேன்சர்… பெண்களுக்காக கர்நாடகா அரசு போட்ட மாஸ்டர் பிளான்…!”

பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…

3 மணத்தியாலங்கள் ago

“தமிழக பெண்களுக்கு ஜாக்பாட்… இலவச பேருந்து பயணம்…? மகளிர் உரிமைத் தொகை ரூ 2,500 உயர்வு எப்போது…?” – 2 வாரத்தில் வரப்போகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…

3 மணத்தியாலங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்களின் கவனத்திற்கு…! கைரேகை பதிவு செய்யாவிட்டால் பெயர் நீக்கமா…? விளக்கம் கொடுத்த அதிகாரிகள்…!!

தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…

3 மணத்தியாலங்கள் ago

“இது என்னடா புதுசா…”அரங்கம் அதிர வைக்க வந்த ரசிகர்கள்… ‘செக்’ வைத்த திரையரங்கம்… ரசிகர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… அறந்தாங்கியில் உச்சகட்ட பரபரப்பு…!

சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…

4 மணத்தியாலங்கள் ago