அடச்சீ… நீயெல்லாம் ஒரு மனுஷனா… வீட்டில் தனியாக இருந்த 9-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த விபரீதம்… மருத்துவ பரிசோதனையில் அதிர்ச்சி… தனியார் பள்ளி ஆசிரியர் கைது…!!

Spread the love

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள உறைவிடப் பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர், கோடை விடுமுறையின்போது வீட்டில் தனியாக இருந்த தருணத்தில் தனியார் ஆசிரியரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கர்ப்பமாகியுள்ளார். அப்பகுதியில் நிலவிய கடுமையான வெப்பநிலை காரணமாக மார்ச் மாதத்திலேயே பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த விடுமுறை காலத்தில்தான் இந்த கோரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

பள்ளியின் இந்த வார தொடக்கத்தில் மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட வழக்கமான மருத்துவப் பரிசோதனையின்போது, அந்த மாணவி சுமார் 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக மாணவியின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்ததை அடுத்து, பெற்றோரிடம் பேசிய மாணவி தமக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்தும், இந்தச் சம்பவம் குறித்து யாரிடமும் கூறக்கூடாது என ஆசிரியர் மிரட்டியது குறித்தும் விளக்கிக் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். குற்றச்சாட்டுக்கு உள்ளான தனியார் ஆசிரியரைக் கைது செய்துள்ள போலீசார், மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள மாணவிக்கு நீதி வழங்கும் பொருட்டு இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

Swetha

Recent Posts

“ரகசிய 6 போன் கால்கள்…” கோடீஸ்வரர் கொலையில் அதிரடித் திருப்பம்… பெற்ற தந்தையை கொல்ல கூலிப்படைக்கு ஸ்கெட்ச் போட்ட மகனா…? திடீர் டுவிஸ்ட்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பிரபல பார்மா தொழிலதிபரும் கோடீஸ்வரருமான வினீத் மனோச்சா கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி…

11 minutes ago

“செங்குத்தான ஏற்றத்தில் பின்னோக்கி பாய்ந்த லாரி…” நொடி பொழுதில் மரணத்தின் பிடியில் சிக்கிய பெண்… வைரலாகும் திக் திக் வீடியோ காட்சிகள்…!!

செங்குத்தான ஏற்றம் அல்லது மேடான சாலைகளில் வாகனங்களை இயக்கும்போது கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும் எவ்வளவு பெரிய ஆபத்து நேரிடும் என்பதை…

21 minutes ago

பிரசவ வலியில் துடித்து…! தாயின் முன்னால் அமைதி… ஆம்புலன்ஸ் சென்றதும் அழுகை…” கஜகஸ்தானில் சிசிடிவியில் சிக்கிய நெகிழ்ச்சி காட்சி…!!

கஜகஸ்தான் நாட்டில் தாயின் மீதான பாசத்தையும், பிஞ்சு குழந்தைகளின் முதிர்ச்சியையும் உணர்த்தும் வகையில் அரங்கேறிய நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இணையவாசிகளின்…

41 minutes ago

“என்னால படிப்பு சுமை தாங்க முடியல…” 15-வது மாடியில் இருந்து குதித்த பள்ளி மாணவி… கதறிய பெற்றோர்…. நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள பிரபல 'கௌர் சித்தார்தம் சொசைட்டி' குடியிருப்பில் 15-வது மாடியில் இருந்து குதித்து 16…

51 minutes ago

விஜய் சேதுபதிக்கு நேரம் சரியில்லை…. ரூ.80 கோடி வாங்குறதுக்கு இதான் காரணமா?…. தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் ஓபன் டாக்….!

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செரையம்பாளையம் பகுதியில், கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து சேவையைத் தமிழக…

1 மணத்தியாலம் ago