“செங்குத்தான ஏற்றத்தில் பின்னோக்கி பாய்ந்த லாரி…” நொடி பொழுதில் மரணத்தின் பிடியில் சிக்கிய பெண்… வைரலாகும் திக் திக் வீடியோ காட்சிகள்…!!

Spread the love

செங்குத்தான ஏற்றம் அல்லது மேடான சாலைகளில் வாகனங்களை இயக்கும்போது கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும் எவ்வளவு பெரிய ஆபத்து நேரிடும் என்பதை உணர்த்தும் நடுக்கமூட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேடான சாலையில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த கனரக லாரி ஒன்று, ஏற்றத்தைக் கடக்க முடியாமல் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து பின்புறமாக அதிவேகத்தில் பாய்ந்து வரத் தொடங்கியது. அப்போது அந்த லாரிக்கு மிக அருகில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் ஒருவர், லாரி பின்னோக்கி வருவதை உணர்ந்து அதிர்ச்சியடைந்தார்.

நொடிப் பொழுதில் லாரியின் விபத்து வளையத்திற்குள் சிக்கிய அவர், சாதுரியமாகத் தன் பைக்கை அங்கேயே போட்டுவிட்டு அலறியடித்துப் பக்கவாட்டில் குதித்து உயிர் தப்பினார். கண்முன்னே அவரது இருசக்கர வாகனம் லாரியின் சக்கரங்களில் சிக்கிச் சல்லடையாக நொறுங்கியது. “மேடான சாலைகளில் முன்னே செல்லும் பெரிய வாகனங்களுக்குப் பின்னால் பாதுகாப்பான இடைவெளி விட்டுப் பயணிக்க வேண்டும்” என்றும், “அவசர காலத்தில் வாகனத்தை விட உயிரே முக்கியம்” என்றும் நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

“புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்…” பொறி விற்று பிழைத்த ஏழை… அடித்து தூக்கி எறிந்து அராஜகம் செய்த ரவுடி…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ….!!

பீகார் மாநிலம் பாட்னா ஜங்ஷன் ரயில் நிலைய வளாகத்திற்கு வெளியே, நள்ளிரவு என்றும் பகல் என்றும் பாராமல் காலில் செருப்புக்…

21 minutes ago

“இன்ஸ்டாகிராமில் மர்ம பதிவு…” 48 மணி நேரத்தில் அழுகிய நிலையில் பெண் போலீசின் சடலம்… நடந்தது என்ன…? பெரும் பரபரப்பு சம்பவம்…!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 28 வயதான ஜான்வி தபி என்ற இளம் பெண் காவலர், காந்திநகர் செக்டார் 3D…

31 minutes ago

“ரகசிய 6 போன் கால்கள்…” கோடீஸ்வரர் கொலையில் அதிரடித் திருப்பம்… பெற்ற தந்தையை கொல்ல கூலிப்படைக்கு ஸ்கெட்ச் போட்ட மகனா…? திடீர் டுவிஸ்ட்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பிரபல பார்மா தொழிலதிபரும் கோடீஸ்வரருமான வினீத் மனோச்சா கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி…

51 minutes ago

“அங்கிட்டும் போக முடியாம… இங்கிட்டும் வர முடியாம…” ஜன்னல் கம்பிக்குள் சிக்கிய பலே திருடன்…! கம்புகளாலும் கற்களாலும் வீசியடித்த பொதுமக்கள்…. வைரலாகும் பகீர் வீடியோ…!!

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ராஜாராம் நகர் சொசைட்டியில் உள்ள என்.ஆர்.ஐ ஒருவரின் பூட்டிய வீட்டிற்குள், நள்ளிரவில் திருடன் ஒருவன்…

1 மணத்தியாலம் ago

பிரசவ வலியில் துடித்து…! தாயின் முன்னால் அமைதி… ஆம்புலன்ஸ் சென்றதும் அழுகை…” கஜகஸ்தானில் சிசிடிவியில் சிக்கிய நெகிழ்ச்சி காட்சி…!!

கஜகஸ்தான் நாட்டில் தாயின் மீதான பாசத்தையும், பிஞ்சு குழந்தைகளின் முதிர்ச்சியையும் உணர்த்தும் வகையில் அரங்கேறிய நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இணையவாசிகளின்…

1 மணத்தியாலம் ago