உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பிரபல பார்மா தொழிலதிபரும் கோடீஸ்வரருமான வினீத் மனோச்சா கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், நாட்டையே உலுக்கும் வகையில் அதிர்ச்சி தரும் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கொலை வழக்கைத் தீவிரமாக விசாரித்து வந்த போலிஸார், கொலையாளி பயன்படுத்திய செல்போன் எண்களின் அழைப்பு விவரங்களை ஆய்வு செய்தனர்.
இதில், துப்பாக்கியால் சுட்ட முக்கிய ஷூட்டரான விஷால் கௌதம் என்பவர், கொலை நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக ஒரு புதிய சிம் கார்டை வாங்கியது தெரியவந்தது. அந்தப் புதிய எண்ணில் இருந்து தொழிலதிபர் வினீத் மனோச்சாவின் மகன் சுப்ரத் மற்றும் மருமகள் ஷாலு ஆகிய இருவரின் செல்போன்களுக்கும் 6 முறை ரகசியமாக போன் கால்கள் செய்யப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
கான்பூர் காவல் ஆணையர் ரகுபீர் லால் இதுகுறித்துத் தெரிவிக்கையில், பெற்ற தந்தையைக் கொலை செய்ய மகனே கூலிப்படைக்குச் சதித் திட்டம் தீட்டிக் கொடுத்தாரா என்ற கோணத்தில் விசாரணை தீவிரமடைந்துள்ளதாகக் கூறினார். சொந்தக் குடும்பத்தினரே சொத்துக்காக அல்லது முன்விரோதத்தால் கோடீஸ்வரரைக் கூலிப்படை வைத்துத் தீர்த்துக்கட்டினார்களா என்ற இந்த வழக்கு கான்பூர் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் மஞ்சேரியால் மாவட்டம் கொத்தபள்ளி பகுதியில், வரதட்சணைக் கொடுமை காரணமாகக் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியின் மூக்கைக்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள ஏக் மூர்த்தி சௌக் அருகே, அதிகாலை நேரத்தில் சாலையைக் கடக்க…
பீகார் மாநிலம் பாட்னா ஜங்ஷன் ரயில் நிலைய வளாகத்திற்கு வெளியே, நள்ளிரவு என்றும் பகல் என்றும் பாராமல் காலில் செருப்புக்…
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 28 வயதான ஜான்வி தபி என்ற இளம் பெண் காவலர், காந்திநகர் செக்டார் 3D…
செங்குத்தான ஏற்றம் அல்லது மேடான சாலைகளில் வாகனங்களை இயக்கும்போது கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும் எவ்வளவு பெரிய ஆபத்து நேரிடும் என்பதை…
குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ராஜாராம் நகர் சொசைட்டியில் உள்ள என்.ஆர்.ஐ ஒருவரின் பூட்டிய வீட்டிற்குள், நள்ளிரவில் திருடன் ஒருவன்…