குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 28 வயதான ஜான்வி தபி என்ற இளம் பெண் காவலர், காந்திநகர் செக்டார் 3D பகுதியில் உள்ள தனது வாடல் வீட்டில் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கி சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அம்மாநில போலிஸ் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாகக் காவல் துறையில் பணியாற்றி வந்த ஜான்வி தபி, விவாகரத்தானவர்.
இவர் அகமதாபாத் ஷாஹிபாக் காவல் தலைமையகத்தில் காவலராகப் பணியாற்றி வந்த நிலையில், காந்திநகரில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘நான் ஒரு அரக்கனாக இருந்திருக்க விரும்புகிறேன்’ என மர்மமான மற்றும் குழப்பமான பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதன் பிறகு அவர் யாரிடமும் பேசவில்லை எனக் கூறப்படுகிறது. திங்கள்கிழமை இரவு அவரது வீட்டின் பூட்டிய கதவுக்குப் பின்னிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் போலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிஸார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ஜான்வி தபியின் உடல் அழுகிய நிலையில் தூக்கில் தொங்குவதைக் கண்டு உறைந்துபோயினர். அவர் இன்ஸ்டாவில் பதிவு வெளியிட்ட 48 மணி நேரத்திற்குள் இந்தச் சோகம் நடந்துள்ளது. அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்ற கோணத்தில் காந்திநகர் போலிஸார் தீவிரமாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10-வது சீசனைத் தொகுத்து வழங்கி வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சமீபத்திய எபிசோட் ஒன்றில் போட்டியாளர்…
'கத்துக்குட்டி', 'உடன்பிறப்பே' மற்றும் 'நந்தன்' ஆகிய கவனத்தை ஈர்த்த திரைப்படங்களை இயக்கிய முன்னணி இயக்குநர் இரா.சரவணன், தனது மாமனாருக்கு ஏற்பட்ட…
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் சிரா தாலுகா ஹுனசேகட்டே கிராமத்தைச் சேர்ந்த தர்ஷன் (25) மற்றும் உஷாராணி (21) ஆகிய…
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் கொத்வாலி நகர் காவல் எல்லைக்குட்பட்ட பஹ்லிம்பூரா கிராமத்தில், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டுப் பேரன் ஒருவன்…
தெலங்கானா மாநிலம் மஞ்சேரியால் மாவட்டம் கொத்தபள்ளி பகுதியில், வரதட்சணைக் கொடுமை காரணமாகக் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியின் மூக்கைக்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள ஏக் மூர்த்தி சௌக் அருகே, அதிகாலை நேரத்தில் சாலையைக் கடக்க…