கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செரையம்பாளையம் பகுதியில், கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து சேவையைத் தமிழக வெற்றிக் கழகத் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் மீண்டும் தொடங்கி வைத்தார். பேருந்தில் பயணம் செய்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடிய பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முந்தைய ஆட்சியாளர்கள் மக்களின் குறைகளைக் கவனிக்காமல் தங்களின் சுயநலத்தையே பார்த்ததாகக் கடுமையாகக் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி தமிழக முதல்வரை மறைமுகமாக விமர்சித்ததாக எழுந்துள்ள சர்ச்சைகளுக்குப் பதிலளித்தார். விஜய் சேதுபதி ‘மகாராஜா’ திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பே, அவரது ஜாதகக் கட்டங்களைப் பார்த்து அவருக்கு விரைவில் ‘ஜாக்பாட்’ அடிக்கும் என்று கூறியிருந்ததாகக் குறிப்பிட்ட எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ், அந்த கணிப்பின்படியே பிக் பாஸ் நிகழ்ச்சி அவருக்குப் பெரிய ஜாக்பாட்டாக அமைந்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுமார் 100 நாட்களுக்கு 80 கோடி ரூபாய் வரை அவருக்குச் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும், இந்தத் தொகைக்காகவே அவர் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல் முதல்வரை மறைமுகமாக விமர்சித்துப் பேசி வருவதாகவும் குற்றம்சாட்டினார். குறிப்பிட்ட சில கட்சியினரிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டே விஜய் சேதுபதி இவ்வாறு பேசுவதாகவும், துணிச்சலிருந்தால் நேரடியாகத் தலைவரின் பெயரைக் குறிப்பிட்டுப் பேசட்டும் என்றும், அதற்கு மக்களே தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்றும் அவர் சவால் விடுத்தார்.
மேலும், நடிகர் விஜய் சேதுபதிக்கு தற்போது நேரம் சரியில்லை என்று குறிப்பிட்ட அவர், இதை வெறும் கேளிக்கை நிகழ்ச்சியாகவும், விஜய் சேதுபதி தன் பிழைப்பிற்காகச் செய்யும் ஒரு செயலாகவுமே பார்க்க வேண்டும் என்றார். மக்கள் அனைவரும் தற்போது சட்டமன்ற நிகழ்வுகளைக் கூர்ந்து கவனித்து வரும் சூழலில், அவர் இதுபோன்ற விமர்சனங்களை இதோடு நிறுத்திக் கொள்வது அவருக்கு நல்லது என்றும் எச்சரிக்கும் தொனியில் அறிவுறுத்தினார்.
இறுதியாக வரவிருக்கும் இடைத்தேர்தல் குறித்துப் பேசிய கனிமொழி சந்தோஷ், கடந்தகால ஆட்சியின் செயல்பாடுகளையும் தற்போதைய ஆட்சியின் மக்கள் நலப் பணிகளையும் மக்கள் கண்கூடாகப் பார்த்து உணர்ந்துள்ளதாகத் தெரிவித்தார். தங்களது ஆட்சியின் மீது மக்களுக்குப் பூரண நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால், வரவிருக்கும் இடைத்தேர்தலில் தங்களது தலைவர் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவரே மகத்தான வெற்றி பெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
பீகார் மாநிலம் பாட்னா ஜங்ஷன் ரயில் நிலைய வளாகத்திற்கு வெளியே, நள்ளிரவு என்றும் பகல் என்றும் பாராமல் காலில் செருப்புக்…
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 28 வயதான ஜான்வி தபி என்ற இளம் பெண் காவலர், காந்திநகர் செக்டார் 3D…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பிரபல பார்மா தொழிலதிபரும் கோடீஸ்வரருமான வினீத் மனோச்சா கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி…
செங்குத்தான ஏற்றம் அல்லது மேடான சாலைகளில் வாகனங்களை இயக்கும்போது கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும் எவ்வளவு பெரிய ஆபத்து நேரிடும் என்பதை…
குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ராஜாராம் நகர் சொசைட்டியில் உள்ள என்.ஆர்.ஐ ஒருவரின் பூட்டிய வீட்டிற்குள், நள்ளிரவில் திருடன் ஒருவன்…
கஜகஸ்தான் நாட்டில் தாயின் மீதான பாசத்தையும், பிஞ்சு குழந்தைகளின் முதிர்ச்சியையும் உணர்த்தும் வகையில் அரங்கேறிய நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இணையவாசிகளின்…