கஜகஸ்தான் நாட்டில் தாயின் மீதான பாசத்தையும், பிஞ்சு குழந்தைகளின் முதிர்ச்சியையும் உணர்த்தும் வகையில் அரங்கேறிய நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இணையவாசிகளின் நெஞ்சை உருக வைத்துள்ளது. கஜகஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு திடீரெனக் கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது அவரது கணவர் பணி நிமித்தமாக வெளியூர் சென்றிருந்ததால், உடனடியாக ஆம்புலன்ஸிற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆம்புலன்ஸ் வந்ததும், அந்த பெண்ணின் சிறு வயது குழந்தைகள் இருவரும் தாய்க்கு எந்தவித பயமும் பதற்றமும் வந்துவிடக் கூடாது என்பதற்காக மிகவும் அமைதியாகவும் தைரியமாகவும் தாயின் பொருட்களை எடுத்து வைத்து ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர். மருத்துவமனையிலிருந்து பிரசவம் முடிந்து வீட்டிற்குத் திரும்பிய தாய், வீட்டின் வாசலில் உள்ள சிசிடிவி காட்சிகளைப் பார்த்தபோதுதான் அந்த அதிர்ச்சி உண்மை தெரியவந்தது.
தாய் ஆம்புலன்ஸில் ஏறிச் சென்ற அந்த நொடி வரை அமைதியாக இருந்த அந்த இரு சிறுவர்களும், ஆம்புலன்ஸ் கண்ணை விட்டு மறைந்த மறுநிமிடம் தங்களது கட்டுப்பாட்டை இழந்து நிலைகுலைந்து கதறி அழுத காட்சி சிசிடிவியில் பதிவாகியிருந்தது. தன் பயத்தை அதிகப்படுத்தக் கூடாது என்பதற்காகப் பிள்ளைகள் காட்டிய இந்த முதிர்ச்சியைக் கண்டு அந்தத் தாய் கண்ணீர் விட்டு நெகிழ்ந்து போயுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள ஏக் மூர்த்தி சௌக் அருகே, அதிகாலை நேரத்தில் சாலையைக் கடக்க…
பீகார் மாநிலம் பாட்னா ஜங்ஷன் ரயில் நிலைய வளாகத்திற்கு வெளியே, நள்ளிரவு என்றும் பகல் என்றும் பாராமல் காலில் செருப்புக்…
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 28 வயதான ஜான்வி தபி என்ற இளம் பெண் காவலர், காந்திநகர் செக்டார் 3D…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பிரபல பார்மா தொழிலதிபரும் கோடீஸ்வரருமான வினீத் மனோச்சா கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி…
செங்குத்தான ஏற்றம் அல்லது மேடான சாலைகளில் வாகனங்களை இயக்கும்போது கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும் எவ்வளவு பெரிய ஆபத்து நேரிடும் என்பதை…
குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ராஜாராம் நகர் சொசைட்டியில் உள்ள என்.ஆர்.ஐ ஒருவரின் பூட்டிய வீட்டிற்குள், நள்ளிரவில் திருடன் ஒருவன்…