பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10-வது சீசனைத் தொகுத்து வழங்கி வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சமீபத்திய எபிசோட் ஒன்றில் போட்டியாளர் ஷாத்திகாவிடம் தலைமைப் பண்பு குறித்துப் பேசுகையில் “பழியை அடுத்தவர்கள் மீது போடக்கூடாது” எனப் பேசிய கருத்து தமிழ்நாட்டில் மாபெரும் அரசியல் மற்றும் திரை உலகச் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அவர் விஜய் பெயரைக் குறிப்பிடாவிட்டாலும், கரூர் சம்பவம் உள்ளிட்டவற்றை மறைமுகமாகக் குறிப்பிட்டு நடிகர் விஜய்யைத்தான் விமர்சிக்கிறார் எனத் தமிழக வெற்றிக் கழக தொண்டர்களும் விஜய் ரசிகர்களும் கொதிப்படைந்துள்ளனர். விஜய் சேதுபதியை ‘திமுகவின் கைகூலி’ என விமர்சித்து சோசியல் மீடியாவில் விர்ச்சுவல் வாரியர்ஸ் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். தவெக நிர்வாகிகள் சிலர் விஜய் சேதுபதி செல்லும் இடமெல்லாம் முற்றுகையிடுவோம் என எச்சரித்துள்ள நிலையில், சீமான் மற்றும் இயக்குநர் சீனு ராமசாமி ஆகியோர் விஜய் சேதுபதிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர்.
இதனிடையே, திமுக ஆதரவாளரான நடிகர் போஸ் வெங்கட்டின் மனைவியும் நடிகையுமான சோனியா, “விஜய் சேதுபதி பேசியது வேறு யாரையோ போட்டுத் தாக்கியது போலத்தான் எனக்குத் தோன்றியது” எனக் கூறியிருப்பது சர்ச்சையின் எண்ணெய்யை ஊற்றியுள்ளது. இருப்பினும் ‘யாரையும் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டாம்’ என விஜய் டிவி விளக்கம் அளித்துள்ள போதிலும், இணையத்தில் இந்த விவாதம் பெரும் ரணகளமாக உருவெடுத்துள்ளது.
ஒடிசா மாநிலம் பாலங்கீர் மாவட்டம் தேபதமுண்டா கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் கார்செல் (45) கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரெனக்…
பெங்களூரில் வியாழக்கிழமை காலை 9.15 மணியளவில் 26 வயதான மதுமிதா என்ற செவிலியர் மீது அவரது கணவர் வெங்கடேஷ் என்பவர்…
உத்தரப்பிரதேச மாநிலம் புலந்தஷஹர் மாவட்டத்தில், 51 ஆண்டுகள் தம்பதியாக வாழ்ந்த 70 வயது மூதாட்டிக்கும் 75 வயது முதியவருக்கும் இடையே…
திமுக கூட்டணியில் தேமுதிக இணைக்கப்பட்டது குறித்தும், அவர்களுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது குறித்தும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசிய…
மழையின் மெல்லிய சாரலும் குளிர்ந்த காற்றும் பால்கனி அமர்வை இதமாக்கிக் கொண்டிருந்த வேளையில், எதிரே இருந்த கட்டிடத்தின் 9வது மாடியில்…
17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில், தவெக அரசு செய்த…