17 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த விழாவில் அலட்சியமும் அவமதிப்புமே பரிசு… மக்களை புண்படுத்திட்டீங்க… மதுரை மீனாட்சியம்மன் கும்பாபிஷேக விவகாரத்தில் வானதி சீனிவாசன் கண்டனம்…!!

Spread the love

17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில், தவெக அரசு செய்த அரைகுறை ஏற்பாடுகளால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக பாஜக முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் பக்கத்தில் தவெக அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “உலகெங்கும் வாழும் தமிழ் மக்களால் மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கப்பட்ட இந்த புனித நிகழ்வில், சாமானிய பக்தர்கள் நீண்ட நேரம் கால் கடுக்கக் காத்திருக்க வைக்கப்பட்டு, கூட்ட நெரிசலிலும் மன உளைச்சலிலும் தள்ளப்பட்டுள்ளனர். தவெக அரசின் அலட்சியப் போக்கும் அரைகுறை ஏற்பாடுகளுமே இதற்கு முழு முதல் காரணம்” என்று சாடியுள்ளார்.

மேலும், “தங்கள் மீது புனித நீர் விழாதா என ஏங்கிய பக்தர்களுக்கு, காவல்துறையினர் பிளாஸ்டிக் டப்பாவில் அடைக்கப்பட்ட நீரை வாளி நீரில் கலந்து தெளித்ததாகக் கூறப்படும் சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. புனிதமான வழிபாட்டு நம்பிக்கைகளைப் புண்படுத்திய தவெக அரசு, பக்தர்களுக்கு அவமதிப்பையே பரிசாக அளித்துள்ளது” என்று வானதி சீனிவாசன் காட்டமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

Devi Ramu

Recent Posts

திக் திக்… துரோகத்தை தட்டிக்கேட்ட சட்டக்கல்லூரி மாணவி… நடுரோட்டில் அரங்கேறிய வெறிச்செயல்.. பெங்களூரை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

பெங்களூரில் சட்டக்கல்லூரி மாணவியும், பிட்சா விற்பனை மைய ஊழியருமான 21 வயது அம்ருதா என்பவரைப் பின்னால் இருந்து தாக்கி கத்தியால்…

7 minutes ago

“ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்…” ரூ.1,200 கோடி மக்கள் பணம் வீண்… புதிய தலைமைச் செயலக திட்டத்திற்கு ஜெயக்குமார் கடும் எதிர்ப்பு…!!

சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 15 மாடிகளுடன் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைக்கத் தமிழக…

12 minutes ago

“இந்தியாவுக்கு 100 சதவீத வரி…” அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிரடியாக நிறைவேறிய மசோதா… டிரம்ப் நடவடிக்கையால் பெரும் பரபரப்பு….!!

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறை பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். குறிப்பாக, ரஷ்யாவிடம்…

27 minutes ago

“வீட்டுக்கு வர மாட்டேன்…” ஆத்திரத்தில் மனைவி மூக்கை கடித்து துப்பிய கணவர்…. வலியில் அலறி துடித்து…. நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் மஞ்சேரியல் மாவட்டம் கொட்டப்பள்ளி மண்டல் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிசந்தர். இவருடைய மனைவி மமதா, கணவரிடம் கோபித்துக் கொண்டு…

34 minutes ago

இங்கே கொண்டாட்டம்… அங்கே கொலை வெறி… கிட்டி பார்ட்டி கூச்சலுக்கு நடுவே… 26 முறை குத்தி முதியவர் கொடூரக் கொலை… கான்பூரில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!!

கான்பூரில் நடைபெற்ற ஒரு கிட்டி பார்ட்டி, எதிர்பாராதவிதமாக ஒரு கொடூரமான கொலைத் திட்டத்திற்கான மறைப்பாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.…

35 minutes ago