பெங்களூரில் சட்டக்கல்லூரி மாணவியும், பிட்சா விற்பனை மைய ஊழியருமான 21 வயது அம்ருதா என்பவரைப் பின்னால் இருந்து தாக்கி கத்தியால் குத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஜூலை 13 அன்று பணிக்குச் செல்லும் வழியில் தாக்கப்பட்ட அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஜூலை 15 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தடுத்து நிறுத்த முயன்ற உள்ளூர்வாசிகளையும் தாக்கிய குற்றவாளியை அப்பகுதி மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
தனுஷ் என்பவருடனான காதலை அம்ருதா அண்மையில் முறித்துக் கொண்டதே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. தனுஷிற்கு ஏற்கனவே திருமணமாகி, விவாகரத்தாகி ஒரு குழந்தை இருப்பது அம்ருதாவிற்குத் தெரியவந்ததையடுத்து, அவர் அந்த உறவிலிருந்து விலகியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தனுஷின் தம்பி சூர்யா என்பவரே அம்ருதாவைத் தாக்கியதாகக் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
https://twitter.com/nextminutenews7/status/2100437522614796720/video/1
இக்கொலை தொடர்பாக சூர்யா மற்றும் தனுஷ் ஆகிய இருவரையும் ஜீவன் பீமா நகர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காதலை நிராகரித்ததால் தான் அம்ருதா கொல்லப்பட்டதாக அவருடைய குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். எனினும், இருவருக்கும் இடையே பணத் தகராறு ஏதேனும் இருந்ததா என்ற கோணத்திலும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…