திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே.பேட்டை அருகே, குடும்பத் தகராறு காரணமாக மனைவியை குடும்பம் நடத்த அழைத்தபோது ஏற்பட்ட மோதலில், மனைவி மற்றும் மாமனார், மாமியார் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரை மருமகன் கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் படுகாயமடைந்த மூவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தப்பியோடிய நபரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஆர்.கே.பேட்டை வட்டம் பத்மாபுரம் அருகே உள்ள இடப்பற்றை கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி சாந்தி மற்றும் மகள் ரேகா. கணவர் ராஜேஷுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ரேகா கடந்த சில காலமாக கணவரைப் பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று திடீரென மாமனார் வீட்டிற்கு வந்த ராஜேஷ், தன்னுடன் குடும்பம் நடத்த உடனடியாக வருமாறு ரேகாவை அழைத்துள்ளார். இதற்கு ரேகா மறுப்பு தெரிவிக்கவே, இருவருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது.
வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த ராஜேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரேகாவை சரமாரியாக வெட்டியுள்ளார். மகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த மாமனார் ரவியும், மாமியார் சாந்தியும் ராஜேஷை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், மேலும் ஆத்திரமடைந்த ராஜேஷ், தடுத்த இருவரையும் கத்தியால் கண்மூடித்தனமாக வெட்டியுள்ளார். இதில் மூவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்ததைக் கண்ட ராஜேஷ், அங்கிருந்து உடனடியாகத் தப்பி ஓடிவிட்டார்.
அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.கே.பேட்டை காவல்துறையினர், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மூவரையும் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின், மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் மூவரும் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாக உள்ள ராஜேஷைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…