“இந்த நேரத்துல இங்க என்ன வேலை?”… மாணவனுடன் இருந்தபோது நடந்த விபரீதம்… நள்ளிரவில் காட்டுக்குள் பணம் பறித்த போதை கும்பல்…!!

Spread the love

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த காதர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஷமீல் அகமது. வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமிய கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் இவர், சில நாட்களுக்கு முன் இரவு நேரத்தில் ரெட்டித்தோப்பு காட்டுப்பகுதியில் ஒரு பள்ளி மாணவருடன் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சில போதை ஆசாமிகள், அவர்கள் இருவரையும் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், பேராசிரியரை கடுமையாகத் தாக்கி மிரட்டிய அந்த கும்பல், அவரிடமிருந்த பணம் மற்றும் செல்போனை வலுக்கட்டாயமாகப் பறித்துச் சென்றது.

தாக்குதல் நடத்தியதோடு மட்டுமின்றி, அந்த செயலைத் தங்களது செல்போனிலும் அந்த கும்பல் வீடியோவாக பதிவு செய்துள்ளது. பின்னர் அந்த காட்சிகளைச் சமூக வலைதளங்களில் அவர்கள் பதிவேற்றம் செய்த நிலையில், தற்போது அந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபுறமிருக்க, அடையாளம் தெரியாத சில நபர்கள் அந்த பேராசிரியரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மேலும் பணம் தரக் கோரித் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்.

இந்தத் தொடர் மிரட்டல்களால் அதிர்ச்சியடைந்த ஷமீல் அகமது, ஆம்பூர் நகரக் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சிகளை முக்கிய ஆதாரமாகக் கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காணும் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். பணம் பறித்து மிரட்டல் விடுத்ததுடன் தலைமறைவாக உள்ள அந்த நபர்களைப் பிடிக்க போலீசாரின் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Gayathri

Recent Posts

“வரதட்சணை கொடுமையால் அம்மா வீட்டிற்கு வந்த பெண்…! ஆத்திரத்தில் மூக்கை கிள்ளி ரத்த களறியாக்கிய கணவர்… மாமனார் வீட்டில் அராஜகம்…. பகீர் சம்பவம்..!!

தெலங்கானா மாநிலம் மஞ்சேரியால் மாவட்டம் கொத்தபள்ளி பகுதியில், வரதட்சணைக் கொடுமை காரணமாகக் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியின் மூக்கைக்…

14 minutes ago

“புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்…” பொறி விற்று பிழைத்த ஏழை… அடித்து தூக்கி எறிந்து அராஜகம் செய்த ரவுடி…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ….!!

பீகார் மாநிலம் பாட்னா ஜங்ஷன் ரயில் நிலைய வளாகத்திற்கு வெளியே, நள்ளிரவு என்றும் பகல் என்றும் பாராமல் காலில் செருப்புக்…

42 minutes ago

“இன்ஸ்டாகிராமில் மர்ம பதிவு…” 48 மணி நேரத்தில் அழுகிய நிலையில் பெண் போலீசின் சடலம்… நடந்தது என்ன…? பெரும் பரபரப்பு சம்பவம்…!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 28 வயதான ஜான்வி தபி என்ற இளம் பெண் காவலர், காந்திநகர் செக்டார் 3D…

52 minutes ago

“ரகசிய 6 போன் கால்கள்…” கோடீஸ்வரர் கொலையில் அதிரடித் திருப்பம்… பெற்ற தந்தையை கொல்ல கூலிப்படைக்கு ஸ்கெட்ச் போட்ட மகனா…? திடீர் டுவிஸ்ட்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பிரபல பார்மா தொழிலதிபரும் கோடீஸ்வரருமான வினீத் மனோச்சா கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி…

1 மணத்தியாலம் ago

“செங்குத்தான ஏற்றத்தில் பின்னோக்கி பாய்ந்த லாரி…” நொடி பொழுதில் மரணத்தின் பிடியில் சிக்கிய பெண்… வைரலாகும் திக் திக் வீடியோ காட்சிகள்…!!

செங்குத்தான ஏற்றம் அல்லது மேடான சாலைகளில் வாகனங்களை இயக்கும்போது கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும் எவ்வளவு பெரிய ஆபத்து நேரிடும் என்பதை…

1 மணத்தியாலம் ago