தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் மாபெரும் தமிழறிஞர் மறைமலை அடிகளின் மகன் மறை. பச்சையப்பன், உடல்நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் எலும்பு சார்ந்த நோய்க்காக அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது.
வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தமிழறிஞரின் மகனாக இருந்தபோதும், கடுமையான வறுமையின் காரணமாகவே அவர் அரசு மருத்துவமனையை நாடும் சூழல் ஏற்பட்டது. மேம்பட்ட மருத்துவச் சிகிச்சைக்குப் போதிய பணவசதி இல்லாத நிலையில் போராடி வந்த அவரை, அவரது மகள் லலிதாவும், மகன் சிவகுமாரும் உடன் தங்கிப் பராமரித்து வந்தனர்.
ஏற்கனவே அவரது மருத்துவச் செலவுகளுக்கு உதவி கோரியிருந்த நிலையில், தற்போது அவரது உயிரிழப்பு அக்குடும்பத்தை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மறை. பச்சையப்பனின் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்குக்கூட கையில் பணமின்றி அவரது குடும்பத்தினர் தவித்து வருவதால், தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டுத் தேவையான பொருளாதார உதவிகளைச் செய்து தர வேண்டும் என்று அவர்கள் உருக்கமான கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் தலைமையில், தென்னிந்திய மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்கும் சிறப்பு மாநாடு வரும் 19 மற்றும்…
ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களுக்காக மின்சார காரை ஓட்டி வரும் பெண் ஒருவர், தனது காரை சார்ஜ் செய்வதற்காக நிறுத்தியிருந்த…
தவெக கட்சியின் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, பெண்களுக்கு இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று…
தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்படும்போது, பாதிக்கப்பட்டவர்களின் உயிரை விரைவாகக் காக்கும் நோக்கில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய மற்றும் கடுமையான…
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், ஆன்லைன் கேமிங் அடிமைத்தனத்திற்குப் பணம் திரட்டுவதற்காக 17-18 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் தனது…
ஜெர்மனியைச் சேர்ந்த 30 வயதான பியா பிளாங்கர்மேன் மற்றும் பாதி பஞ்சாபி, பாதி ஜெர்மனியரான 42 வயதான ராபின் சிங்…