“காரை விட்டு இறங்குடா வெளியே”… ஆபாச லீலைகளில் ஈடுபட்ட நபரை… வெளுத்து வாங்கிய பெண்… அதிர்ச்சியில் உறைந்த EV சார்ஜிங் மையம்…!!

Spread the love

ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களுக்காக மின்சார காரை ஓட்டி வரும் பெண் ஒருவர், தனது காரை சார்ஜ் செய்வதற்காக நிறுத்தியிருந்த போது முகம் சுளிக்க வைக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அவருக்குப் பக்கத்தில் சார்ஜ் செய்ய நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு காரில் இருந்த நபர் , அந்தப் பெண்ணைப் பார்த்தவாறு அமர்ந்து கொண்டு ஆபாச வீடியோக்களைப் பார்ப்பதும், தவறான செயல்களில் ஈடுபடுவதுமாக இருந்துள்ளார். இதைக் கண்ட அந்தப் பெண் மிகவும் சங்கடமடைந்து அவரைப் புறக்கணிக்க முயன்றும், அந்த நபர் தனது அருவருப்பான செயலை நிறுத்தவில்லை.

பொறுமையிழந்த அந்தப் பெண், நேராக அவரிடம் சென்று, “ஏன் என்னைப் பார்த்தவாறு அமர்ந்து முறைக்கிறீர்கள்? நீங்கள் பார்க்கும் வீடியோவை என் பக்கம் வேறு திருப்புகிறீர்கள். பின் இருக்கையில் சென்று தனியாக அமர்ந்து பாருங்கள்” என்று கண்டித்துள்ளார். ஆனால் அந்த நபர் எதையும் காதில் வாங்காமல், “இது என் கார், நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்” என்று எந்தவித குற்ற உணர்ச்சியும் இன்றி மிகவும் திமிராகப் பதிலளித்துள்ளார்.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அந்தப் பெண், உடனடியாக அங்கிருந்த பார்க்கிங் காவலாளியிடம் இதுகுறித்து புகார் அளித்தார். காவலாளி வந்து அந்த நபரின் வாகனத்தைப் பறிமுதல் செய்ய முயன்றபோது, அவர் அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். அந்த அவசரத்தில் காரை மோதி விபத்துக்குள்ளாக்கியதால், அவர் கையும் களவுமாகப் பிடிபட்டார். பொது இடத்தில் பெண்களிடம் இப்படி அத்துமீறும் நபர்களைத் தயவு தாட்சண்யமின்றி உடனடியாக காவல்துறையிடம் ஒப்படைத்துத் தண்டனை பெற்றுத் தருவதே சரியான நடவடிக்கையாகும்.

Swetha

Recent Posts

தலைநகரில் கூடும் தென்மாநில முதல்வர்கள்… 19, 20 தேதிகளில் கோவளத்தில் ‘மெகா’ கூட்டம்… அமித்ஷா – விஜய் சந்திப்பு நடக்குமா? வெளியான தகவல்…!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் தலைமையில், தென்னிந்திய மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்கும் சிறப்பு மாநாடு வரும் 19 மற்றும்…

4 மணத்தியாலங்கள் ago

குஷியோ குஷி…! மகளிருக்கு அதிரடி ஜாக்பாட்..!! தலா 5 இலவச ஆடுகள்… யாருக்கெல்லாம் கிடைக்கும்?… அமைச்சர் கமலி முக்கிய அறிவிப்பு…!!

தவெக கட்சியின் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, பெண்களுக்கு இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: 10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வரலையா?… ₹10,000 அபராதம்… தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்ட பரபரப்பு உத்தரவு…!!

தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்படும்போது, பாதிக்கப்பட்டவர்களின் உயிரை விரைவாகக் காக்கும் நோக்கில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய மற்றும் கடுமையான…

4 மணத்தியாலங்கள் ago

“அட கொடுமையே… பணமா வேணாம்… என் கேம் அக்கவுண்ட்ல டாப்-அப் பண்ணுங்க?… AI மூலம் போலி போட்டோ அனுப்பி… தந்தையை மிரட்டிய சிறுவன்… உ . பி – யில் பரபரப்பு…!”

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், ஆன்லைன் கேமிங் அடிமைத்தனத்திற்குப் பணம் திரட்டுவதற்காக 17-18 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் தனது…

4 மணத்தியாலங்கள் ago

“காதல்னா இது தான்!”… ஜெர்மன் பெண்ணை கரம்பிடித்த பஞ்சாபி காதலன்… இணையத்தில் வைரலாகும் திருமண வீடியோ…!!

ஜெர்மனியைச் சேர்ந்த 30 வயதான பியா பிளாங்கர்மேன் மற்றும் பாதி பஞ்சாபி, பாதி ஜெர்மனியரான 42 வயதான ராபின் சிங்…

4 மணத்தியாலங்கள் ago

“சத்தம் போட கூடாது… கழுத்தை கம்பியால் இறுக்கி…” மாடிக்கு சென்ற மாணவியை சீரழித்த செக்யூரிட்டி… வேலைக்கு சேர்ந்த 6 நாட்களில் வெறிச்செயல்… பகீர் சம்பவம்…!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் ஆனந்த் நகர் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி இன்டீரியர் டிசைனிங் பயின்று வரும் மாணவி ஒருவர்,…

4 மணத்தியாலங்கள் ago