தவெக கட்சியின் தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, பெண்களுக்கு இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் ஒட்டுமொத்தமாக இரண்டு லட்சம் பெண்களுக்கு ஆடுகள் வழங்கப்பட உள்ள நிலையில், முதற்கட்டமாக 30,000 பயனாளிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் தலா 5 ஆடுகள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்த நெறிமுறைகள் தற்போது தயார் செய்யப்பட்டு வருகின்றன. சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கும், இந்த உதவியால் வாழ்வாதாரம் மேம்படும் என்ற நிலையில் உள்ள ஏழைப் பெண்களுக்கும் இத்திட்டத்தில் முழுமையான முன்னுரிமை அளிக்கப்படும் என கால்நடைத்துறை அமைச்சர் கமலி தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் மட்டுமன்றி, அழிந்து வரும் நாட்டு மாடுகள் மற்றும் நாட்டுக்கோழி இனங்களை மீட்டெடுத்துப் பாதுகாக்கும் வகையிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றை ஆர்வத்துடன் வளர்க்க முன்வரும் விவசாயிகளுக்குச் சிறப்பு ஊக்கத்தொகையும், உரிய பராமரிப்புப் பயிற்சிகளும் அதிக அளவில் வழங்கப்பட உள்ளன. மேலும், விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கூடுதலாக 30,000 பயனாளிகளுக்கு விலையில்லாக் கறவை மாடுகள் வழங்குதல், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பட்டா பிரச்சனைகளுக்கு விரைந்து தீர்வு காணுதல் மற்றும் கால்நடைகளுக்கான பசுந்தீவனத் திட்டத்தை விரிவுபடுத்துதல் போன்ற பல முக்கிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் தலைமையில், தென்னிந்திய மாநிலங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்கும் சிறப்பு மாநாடு வரும் 19 மற்றும்…
ஓலா, உபேர் போன்ற நிறுவனங்களுக்காக மின்சார காரை ஓட்டி வரும் பெண் ஒருவர், தனது காரை சார்ஜ் செய்வதற்காக நிறுத்தியிருந்த…
தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்படும்போது, பாதிக்கப்பட்டவர்களின் உயிரை விரைவாகக் காக்கும் நோக்கில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய மற்றும் கடுமையான…
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், ஆன்லைன் கேமிங் அடிமைத்தனத்திற்குப் பணம் திரட்டுவதற்காக 17-18 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் தனது…
ஜெர்மனியைச் சேர்ந்த 30 வயதான பியா பிளாங்கர்மேன் மற்றும் பாதி பஞ்சாபி, பாதி ஜெர்மனியரான 42 வயதான ராபின் சிங்…
குஜராத் மாநிலம் அகமதாபாத் ஆனந்த் நகர் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி இன்டீரியர் டிசைனிங் பயின்று வரும் மாணவி ஒருவர்,…